/indian-express-tamil/media/media_files/2025/06/19/marukkal-neenga-dr-yoga-vidhya-2025-06-19-16-58-53.jpg)
Marukkal neenga DR Yoga vidhya
சருமத்தில் தோன்றும் மருக்கள் (Warts) பொதுவான ஒரு பிரச்சனை. இவை தீங்கற்றவை என்றாலும், தோற்றத்தைப் பாதிப்பதோடு, சில சமயங்களில் அசௌகரியத்தையும் ஏற்படுத்தலாம். மருக்களை நீக்க நவீன மருத்துவத்தில் பல வழிகள் இருந்தாலும், பக்க விளைவுகள் இல்லாத, பாரம்பரிய முறைகளை நாடுபவர்களும் உண்டு. சித்த மருத்துவத்தில், அம்மான் பச்சரிசி பால் மருக்களை நீக்க ஒரு சிறந்த இயற்கை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
இங்கு இயற்கையான முறையில், வெறும் 7 நாட்களில் மருக்களை உதிர்க்க ஒரு அற்புதமான வீட்டு வைத்தியத்தை டாக்டர் யோக வித்யா பரிந்துரைக்கிறார்.
சுத்தமான சூழலில் வளரும் அம்மான் பச்சரிசி செடியின் தண்டு அல்லது இலையை லேசாகக் கிள்ளினால் அல்லது உடைத்தால், அதிலிருந்து வெள்ளை நிறப் பால் வெளிவரும். ஒரு சிறிய பஞ்சுத் துண்டிலோ அல்லது காது குடையும் பட்ஸிலோ இந்த பாலைச் சேகரிக்கவும்.
சேகரித்த பாலை, மருக்களின் மீது மட்டும் கவனமாகத் தடவ வேண்டும்.
மருக்களைச் சுற்றியுள்ள ஆரோக்கியமான சருமத்தில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதை தொடர்ந்து தடவி வர சில நாட்களிலேயே மருக்கள் காய்ந்து உதிரத் தொடங்கும்.
உங்களுக்கு அம்மான் பச்சரிசி செடி கிடைக்கவில்லை என்றால் கீழே உள்ள கீரிம் ரெடி பண்ணுங்க
கைப்பிடி அளவு சிவப்பு நாயுருவி இலை
சுண்டைக்காய் அளவு சுண்ணாம்பு
கால் டீஸ்பூன் வாஷிங் சோடா
அனைத்தையும் மிக்சியில் சேர்த்து நன்கு அரைத்து பேஸ்ட் செய்து ஏர்டைட் கன்டெய்னரில் சேமித்து வைக்கவும். இதை தினமும் மருக்கள் மீது அப்ளை செய்து வர எளிதாக காய்ந்து உதிர்ந்து விடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.