காலை எழுந்ததும் அடுக்கு தும்மல்... எளிய வீட்டு வைத்தியம் இதுதான்: டாக்டர் ஜென்சி
சைனஸ் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு சில எளிமையான வீட்டு வைத்திய முறைகளை மருத்துவர் ஜென்சி பரிந்துரைத்துள்ளார். அவை குறித்து இந்த செய்திக் குறிப்பில் விரிவாக பார்க்கலாம்.
காலை எழுந்ததும் சிலருக்கு அடுக்கடுக்காக தும்மல் ஏற்படும். இத்துடன் சளி, தொண்டை வலி போன்ற உபாதைகளும் இருக்கும். இவை அனைத்தும் சைனசைட்டிஸ் என்ற பாதிப்பினால் ஏற்படுகிறது என்று மருத்துவர் ஜென்சி தெரிவித்துள்ளார். மண்டை ஓட்டில் நான்கு பகுதிகளாக இருக்கும் காலி இடத்தை இது குறிக்கிறது என்று அவர் குறிப்பிடுகிறார்.
Advertisment
இந்தப் பகுதிகள் தொற்று காரணமாக வீக்கமடைந்து சளி உருவாகும் போது அடுக்கு தும்மல் ஏற்படும். இந்த நிலையை தான் சைனசைட்டிஸ் என்று கூறுவார்கள். அதீத உடல் உஷ்ணம் காரணமாக இது ஏற்படும். இதேபோல், மழைக்காலங்களில் ஏற்படும் ஒவ்வாமை காரணமாகவும் சைனஸ் தொல்லை இருக்கும்.
மேலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்று மருத்துவர் ஜென்சி தெரிவித்துள்ளார். காலையில் ஏற்படும் அடுக்கு தும்மல், தலை பாரம், முகம் வீக்கமாக இருத்தல் போன்றவை இதற்கான அறிகுறிகள். சிலருக்கு சுவை மற்றும் மனம் ஆகியவற்றை உணர முடியாமலும் இருக்கும்.
சைனஸ் உருவாவதை தடுக்க சீரான உணவு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். ஆரஞ்சு, சாத்துக்குடி, நெல்லிக்காய் போன்றவற்றில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதால் இவற்றை எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை, பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளலாம்.
Advertisment
Advertisements
இது தவிர பகல் நேரத்தில் உறங்குவது, மாலை சுமார் 6 மணிக்கு மேல் தலைக்கு குளிப்பதையும் தவிர்க்க வேண்டும். சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது தண்ணீரில் மஞ்சள் போட்டு ஆவி பிடிக்க வேண்டும். மேலும், தேங்காய் எண்ணெய்யில் சிறிய துண்டு கற்பூரத்தை பொடியாக்கி போட்டு சூடுபடுத்தி, நெற்றி மற்றும் கண்ணங்களில் தடவலாம்.
இது போன்ற எளிய வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றி சைனஸ் தொல்லையை கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவர் ஜென்சி தெரிவித்துள்ளார்.
நன்றி - Health Cafe Tamil Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.