சிலருக்கு முகத்தில் அதிகமாக பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் இருக்கும். இவற்றை சரி செய்வதற்கு ஏராளமான ஃபேஸ் கேர் பொருள்களை பயன்படுத்தி இருப்பார்கள். மேலும், இவற்றில் இரசாயனம் சேர்ந்திருப்பதால் இது போன்ற பொருள்களை பயன்படுத்த பலர் தயக்கம் காட்டுவார்கள்.
அதன்படி, இரசாயனம் சேர்க்காத இயற்கை முறையிலான ஃபேஸ் பேக் செய்வது எப்படி என இதில் பார்க்கலாம். இதற்காக, சிறிது அளவு வேப்பிலையை நன்றாக கழுவி மிக்ஸியில் போட்டு, அத்துடன் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டரை சேர்த்து அரைக்க வேண்டும்.
பின்னர், இதனுடன் 2 ஸ்பூன் கடலை மாவு மற்றும் கால் ஸ்பூன் மஞ்சள் சேர்த்து கலந்து முகத்தில் தேய்க்கவும். இதனை சுமார் 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம். இவ்வாறு வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“