பாத வெடிப்பு இருக்கா? இந்த 3 விஷயத்தை மட்டும் ஃபாலோ பண்ணுங்க போதும்: டாக்டர் சிவராமன் யோசனை
பாத வெடிப்பு பிரச்சனை இருப்பவர்கள் பின்பற்றக் கூடிய சில வழிமுறைகளை மருத்துவர் சிவராமன் குறிப்பிட்டுள்ளார். இவை ஏற்படுவதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.
பாத வெடிப்பு பிரச்சனை இருப்பவர்கள் பின்பற்றக் கூடிய சில வழிமுறைகளை மருத்துவர் சிவராமன் குறிப்பிட்டுள்ளார். இவை ஏற்படுவதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.
நிறைய பேருக்கு கால் பாதங்களில் வெடிப்பு இருக்கும். பார்ப்பதற்கு இவை சாதாரணமாக தோன்றினாலும், சில சமயங்களில் வலி ஏற்பட்டு நம் அன்றாட பணிகளில் ஈடுபட முடியாத சூழல் உருவாகும். இந்தப் பிரச்சனைக்கான காரணம் மற்றும் இதனை சரி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
Advertisment
உடலில் சூடு அதிகரிக்கும் போது மென்மையான தசைகளில் வெடிப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக தான் கால் பாதங்களில் அதிகமாக வெடிப்பு ஏற்படுகிறது என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். அந்த வகையில் பித்த வெடிப்பு வராமல் தடுக்க வேண்டுமானால் உடல் சூட்டை தணிக்க வேண்டும். இதற்கு வாழ்வியல் மாற்றங்களை முதலில் மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார்.
அந்த வகையில் தினசரி தலைக்கு குளிக்க வேண்டும். தினசரி தலைக்கு குளிக்கும் போது உடலில் சூடு தணிவதை நாம் உணரத் தொடங்குவோம். ஆனால், அழுக்குகளை போக்குவதற்காக மட்டுமே குளிப்பதாக பலரும் தவறாக புரிந்து கொள்கின்றனர். காலை நேரத்தில் தலைக்கு குளித்து உடல் சூட்டை தணிப்பது பல்வேறு பாதிப்புகள் வருவதை தடுக்க உதவும் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
இது தவிர வாரத்திற்கு ஒரு நாளாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இதனை நாம் பாரம்பரியமாக பின்பற்றி வந்ததாகவும், ஆனால் சமீப நாட்களில் இந்தப் பழக்கத்தை கைவிட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
Advertisment
Advertisements
இது தவிர எண்ணெய் அதிகமாக சேர்க்கப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஆனால், இவற்றை முற்றிலும் நிறுத்தி விடக் கூடாது. பல வைட்டமின்கள் எண்ணெய் மூலமாக கரைந்து உடலுக்கு செல்வதாக மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். எனவே, அதிகப்படியாக எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகளை மட்டுமே தவிர்க்க வேண்டும்.
இது போன்ற விஷயங்கள் அனைத்தையும் பின்பற்றினால், பாத வெடிப்பு பிரச்சனையில் இருந்து விடுபட முடியும். எனினும், இப்பிரச்சனை தீவிரமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
நன்றி - health100 Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.