முடி உதிர்வு பிரச்சனை என்பது தற்போது பலருக்கும் உள்ளது. உடல் நிலையில் மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம் என பல்வேறு காரணங்களால் முடி உதிர்வு ஏற்படலாம். எனினும், பலருக்கு பொடுகு பிரச்சனை இருப்பதால் முடி உதிர்வு ஏற்படுவதாக கூறப்படுகிறது. தலையில் ஏற்படும் வறட்சி தன்மை காரணமாக பொடுகு உருவாகும்.
இந்த பொடுகு பிரச்சனையை போக்குவதற்கு விலை உயர்ந்த ஷாம்பூக்கள், ஹேர் ஆயில் வாங்கி பயன்படுத்தினாலும் சரியான தீர்வு கிடைக்க வில்லை என பலர் கூறுவதை நாம் கேட்டிருப்போம். ஆனால், நம் வீட்டில் இருக்கக் கூடிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு மூலமாகவே பொடுகு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அவற்றை பயன்படுத்தும் முறையை இதில் காணலாம்.
சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை அரைத்து அதன் விழுதை தண்ணீர் சேர்க்காமல் தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பின்னர், சுமார் 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்து விடலாம். இப்படி செய்தால் பொடுகு தொல்லை நீங்கி விடும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
வெங்காயம் மற்றும் பூண்டில் சல்ஃபர் அதிகளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக பொடுகு தொல்லையில் இருந்து நிரந்தர தீர்வு காண முடியும் என்று கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.