கண்களை சுற்றி வட்ட வட்டமாக கருவளையம்... சிம்பிள் வீட்டு வைத்தியம்: டாக்டர் ஷர்மிகா யோசனை
கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையத்தை எவ்வாறு வீட்டு வைத்திய முறையில் அகற்றலாம் என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். அதனை இந்த செய்திக் குறிப்பில் நாம் பார்க்கலாம்.
கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையத்தை எவ்வாறு வீட்டு வைத்திய முறையில் அகற்றலாம் என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். அதனை இந்த செய்திக் குறிப்பில் நாம் பார்க்கலாம்.
தற்போது யாரைப் பார்த்தாலும் அவர்களின் கண்களைச் சுற்றி கருவளையத்தை நாம் காண முடிகிறது. குறிப்பாக, இளம் பருவத்தினரிடம் கருவளையம் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. சரியாக தூங்காததன் காரணமாக கருவளையம் வருவதாக கூறப்படுகிறது.
Advertisment
இன்றைய சூழலில் ஐ.டி நிறுவனங்கள், பத்திரிகை துறை என நிறைய பேர் இரவு நேரத்தில் விழித்திருந்த வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு கணினியை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் கருவளையம் வரும்.
இதற்காக நம் பணியையும் மாற்ற முடியாது. அதற்கு ஏற்ற வகையில் சில வாழ்க்கை முறை மாற்றங்களை நாம் செய்ய வேண்டும். மேலும், வீட்டு வைத்திய முறையில் கருவளையத்தை எப்படி போக்கலாம் என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். அந்த டிப்ஸை காணலாம்.
இரவு நேரத்தில் அதிக நேரம் செல்போன் அல்லது கணினி பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் இருப்பவர்கள், அறையில் இருக்கும் விளக்குகளை ஒளிரச் செய்தபடி அவற்றை பயன்படுத்தலாம் என்று மருத்துவர் ஷர்மிகா அறிவுறுத்துகிறார்.
Advertisment
Advertisements
இது தவிர வேறு ஒரு வீட்டு வைத்திய முறையையும் பின்பற்றலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாக கண்களைச் சுற்றி கருவளையம் இருக்கும் இடத்தில் இயற்கையான கற்றாழை ஜெல்லை போடலாம் என்று மருத்துவர் ஷர்மிகா கூறியுள்ளார்.
இதேபோல், மற்றொரு முறையையும் பின்பற்றலாம். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது தூங்குவதற்கு முன்பாக வெள்ளரிக்காய்களை சிறிய துண்டுகளாக வெட்டி கண்களுக்கு மேல் வைக்கலாம். இப்படி செய்யும் போது கருவளையம் குறையத் தொடங்கும் என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார்.
நன்றி - AvalGlitz Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.