வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றத்தால் இளம் தலைமுறையினருக்கு நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது. இதை போக்குவதற்கு வீட்டிலேயே ஹேர் ஆயில் செய்யலாம்.
4 டேபிள் ஸ்பூன் செம்பருத்தி பொடி எடுத்துக் கொள்ள வேண்டும். 3 டேபிள் ஸ்பூன் கருப்பு எள் எடுத்துக் கொள்ள வேண்டும். கரிசலாங்கன்னி பொடி ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளலாம். இத்துடன் அரை டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடி சேர்க்க வேண்டும்.
அடுப்பில் இரும்பு பாத்திரத்தை வைத்து அதில் 250 மி.லீ தேங்காய் எண்ணெய் ஊற்ற வேண்டும். அதன்பின்னர், கலந்து வைத்த எள் மற்றும் பொடிகள் அனைத்தையும் இதில் சேர்க்க வேண்டும். இதை 8 முதல் 10 நிமிடங்கள் வரை காய்க்க வேண்டும்.
காய்ச்சிய எண்ணெய் ஆறிய பின்னர் அதை வடிகட்டி வேறு பாட்டிலில் மாற்றி பயன்படுத்தலாம். இது நம் முடிக்கு தேவையான சத்துகளை கொடுக்கக்கூடியது. நரை முடியை மறையச் செய்யும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“