இன்றைய தலைமுறையின் பெரிய பிரச்சனை முடி உதிர்வாக இருக்குறது. இதற்கு சிலர் ஆயிரக்கணக்காக பணம் செலவளித்து ஹேர் ஆயில், ஷம்பூ உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றனர். இவற்றில் இரசாயனம் கலந்திருப்பதால் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய சாத்தியக் கூறுகளும் இருக்கிறது.
குறிப்பாக, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் உணவு முறையும் முடி உதிர்வில் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே, உணவு முறைகளில் இருந்து ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பெறுவதற்கான வழிகளை காணலாம்.
முடி வளர்ச்சிக்கு முக்கிய உணவாக முட்டை கருதப்படுகிறது. முட்டையில் அமினோ ஆசிட்ஸ், சின்க், புரதம் ஆகியவை அதிகமாக இருக்கிறது. இது அடர்த்தியான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். இதேபோல், முடி உதிர்வை கட்டுப்படுத்தும். இதை ஹேர் மாஸ்க் ஆகவும் பயன்படுத்தலாம்.
எள்ளில் புரதம் மற்றும் சின்க் அதிகமாக உள்ளது. இதனாலும் முடி உதிர்வு குறையும். எள் எண்ணெய்யை முடியில் தடவி வந்தால், முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
பருப்பு வகைகள், மீன், இறால் உள்ளிட்ட கடல் உணவுகள் ஆகியவையும் முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வக்கின்றன. எனவே, சத்தான உணவுகள் சாப்பிடுவதன் மூலம் முடி வளர்ச்சி மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தையும் நம்மால் பாதிகாக்க முடியும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“