முடி உதிர்வு இன்றைய தலைமுறைக்கு பெரும் பிரச்சனையாக தான் இருக்கிறது. இதற்காக தொழில்நுட்ப முறையிலும் சரி, பாரம்பரிய முறையிலும் சரி மக்கள் தீர்வு காணவேண்டும் என்று தேடிக்கொண்டே தான் இருக்கின்றனர்.
இதற்கான தீர்வாக வீட்டில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தலாம். அதன் செயல்முறையை கீழே காணலாம்.
இந்த செயல்முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதுமானது. முடி உதிர்வை தடுப்பதோடு முடி வளர்ச்சியையும் தூண்ட உதவக்கூடியது.
இந்த செயல்முறையை செய்வதற்கு தேவையான பொருட்கள்:
- சின்ன வெங்காயம் சாறு - 5 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்
- விளக்கெண்ணெய் - 2 ஸ்பூன்
செயல்முறை:
ஒரு சுத்தமான கிண்ணத்தில் 4 ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெய், 2 ஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் 5 ஸ்பூன் சின்ன வெங்காயத்தின் சாறு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு நன்றாக கலக்கவேண்டும்.
இந்த மிக்ஸ் தான் உங்களின் ஹேர்பேக் கலவை. இந்த கலவையை இரவு தூங்க செல்வதற்கு முன் தலையில் இருந்து தலைமுடி நுனி வரை நன்றாக அப்ளை செய்துகொள்ளவேண்டும். பின்பு, 5 முதல் 10 நிமிடம் வரை நன்றாக மசாஜ் செய்துகொள்ளலாம்.
இவ்வாறு செய்வதனால் தலை முடிக்கு ரத்த ஓட்டம் சீராக செல்லும்.
பிறகு, தலையை 'ஷவர் கேப்' மூலமாக கவர் செய்துவிட்டு தூங்க செல்லலாம். மறுநாள் காலை ஷாம்பூ அல்லது சீயக்காய் பயன்படுத்தி தலையை அலசலாம்.
இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், தலை முடி உதிர்வு நின்றுவிடும். அதோடு, தலை முடி நன்கு அதர்த்தியாக ஆரோக்கியமாக வளரும்.
ஏன் வெங்காயம்?
வெங்காயத்தில் இயற்கையாகவே ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் சல்பர் அதிகமாக இருக்கிறது. இவை தலைமுடி வளர்ச்சியை அதிகரித்து, தலைமுடியின் நுனியில் ஏற்படும் வெடிப்புகளை சரி செய்ய உதவும். இதுமட்டுமல்லாமல், தலை முடிக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil