நக சுத்தி எப்போது வரும் என்று நம்மால் கணிக்கவே முடியாது. ஆனால், ஒரு முறை நக சுத்தி வந்து விட்டால் அது குணமாகும் வரை நம்மால் எந்த வேலையும் செய்ய முடியாத வகையில் வலி இருக்கும். இதனை நம் வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்தும் டிப்ஸ் பல உள்ளது. அதில் சுலபமான வழியை தற்போது காணலாம்.
இதனை செய்வதற்கு இரண்டு பொருள்கள் மட்டுமே போதும். ஒரு பல் பூண்டு மற்றும் கால் ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் கொண்டே நக சுத்தியை குணப்படுத்தலாம். முதலில், பூண்டு-ஐ உறித்து விட்டு அதனை நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும். பின்னர், மஞ்சள் தூளை பூண்டுடன் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
இதையடுத்து நக சுத்தி இருக்கும் இடத்தில், இந்தக் கலவையை தடவ வேண்டும். வலி அதிகமாக இருக்கும்பட்சத்தில், மஞ்சள் மற்றும் பூண்டு தேய்த்த பின்னர் அந்த இடத்தில் துணி வைத்து சுற்றிக் கட்டலாம். இவ்வாறு செய்தால் நக சுத்தி இரண்டு நாள்களில் குணமாகிவிடும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“