நம் வீட்டிற்குள் எலி நுழைந்தால், வீட்டில் உள்ள அனைத்து பொருள்களையும் கடித்து சேதப்படுத்தி விடும். புத்தகங்கள், துணிகள் தொடங்கி ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் வயர்கள் என அனைத்தையும் எலிகள் கடித்து சேதப்படுத்தும்.
எலியை அடிக்காமல், கொல்லாமல் வீட்டில் இருக்கும் பொருள்கள் கொண்டே எப்படி விரட்டுவது என இப்பதிவில் பார்க்கலாம்.
ஒரு பழைய பிளாஸ்டிக் கிண்ணத்தை எடுத்து அதில் 2 ஸ்பூன் கோதுமை மாவு சேர்க்க வேண்டும். இத்துடன் 1 ஸ்பூன் கடலை மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் துணி துவைக்க பயன்படுத்தும் பௌடரையும் சேர்க்க வேண்டும். 4 பச்சை மிளகாய்களை இடித்து இத்துடன் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவையுடன் சிறிது தண்ணீர் சேர்க்க வேண்டும். கிட்டத்தட்ட சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.
பின்னர், இவற்றை சிறிய உருண்டைகளாக உருட்டி எலி இருக்கும் இடங்களில் வைத்து விட வேண்டும். இவற்றை எலி சாப்பிட்டால் மீண்டும் வீட்டிற்கு எலி வராது. குழந்தைகள் இதை எடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“