பலருக்கு அடிக்கடி தும்மல், இருமல் மற்றும் தொண்டை கரகரப்பு பிரச்சனை இருக்கும். இதற்காக மற்ற மருந்து மாத்திரைகளை முதன்மையாக எடுத்துக் கொள்வதற்கு பதிலாக வீட்டு வைத்தியத்தில் குணப்படுத்தலாம். அதற்கான வழிமுறைகள் குறித்து தற்போது பார்ப்போம்.
தொண்டை பகுதியில் புண் இருந்தால் கரகரப்பாக இருக்கும். வீட்டு வைத்தியத்தில் இதற்கு எளிதாக தீர்வு காண முடியும். இதற்காக அதிமதுரப் பொடி, மிளகுப் பொடி ஆகியவற்றை வாயில் போட்டு, அதன் உமிழ்நீரை விழுங்கலாம். இது நல்ல தீர்வாக இருக்கும்.
இவை தொண்டை புண் மட்டுமின்றி இருமலையும் குணப்படுத்தும். இது தவிர மற்றொரு வழியிலும் தொண்டை கரகரப்புக்கு தீர்வு கான முடியும். தினமும் இரவு சூடான பாலில், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் இரண்டு சிட்டிகை மிளகு தூள் போட்டு குடிக்கலாம். இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும்.
ஆனால், இதில் சர்க்கரை சேர்த்து குடிக்கக் கூடாது. அதற்கு பதிலாக தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து குடிக்கலாம். பொதுவாகவே, எந்த ஒரு கிருமி பாதிப்பு ஏற்பட்டாலும் முதலில் தும்மல் வரும். இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மஞ்சளை தீயில் சுட்டு, அதன் வாசனையை நுகர்ந்து பார்க்கலாம். இது நல்ல தீர்வாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.