பல் வலி, ஈறு வீக்கம் இருக்கா? இந்த 2 பொருளை வாயில் இப்படி வச்சுக்கோங்க: சுமுக தீர்வு சொல்லும் டாக்டர் மாயவன் செந்தில்குமார்
பல் வலி மற்றும் ஈறு வீக்கம் போன்ற பிரச்சனைகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவர் மாயவன் செந்தில் குமார் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான காரணங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.
பல் வலி மற்றும் ஈறு வீக்கம் போன்ற பிரச்சனைகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவர் மாயவன் செந்தில் குமார் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான காரணங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.
சிலருக்கு பல் வலி, ஈறு பகுதிகளில் வீக்கம் மற்றும் ஈறுகளில் இருந்து இரத்தம் வெளியேறும் பிரச்சனை இருக்கும். வாயில் ஏற்படும் தொற்று காரணமாக இத்தகைய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர் மாயவன் செந்தில் குமார் கூறுகிறார்.
Advertisment
இதற்கான மருந்தை நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கி பயன்படுத்தலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார். அதன்படி, படிகார பஷ்பத்தை வாங்கிக் கொள்ளலாம். இதேபோல், பிளாக் சால்ட் என்று விற்பனையாகும் மற்றொரு மருந்தையும் வாங்க வேண்டும்.
இந்த இரண்டையும் ஒரு டப்பாவில் ஒன்றாக சேர்த்து வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் நேரத்தில் இதனை சிறிதளவு எடுத்து தண்ணீரில் கலக்க வேண்டும். அதன் பின்னர், ஒரு காட்டனை இதில் நனைத்து வலி மற்றும் வீக்கம் இருக்கும் இடத்தில் வைக்கலாம்.
இவ்வாறு செய்யும் போது அடுத்த 5 நிமிடங்களில் தொற்று குணமடைந்து வலி குறையும் என்று மருத்துவர் மாயவன் செந்தில் குமார் தெரிவித்துள்ளார். எனவே, ஏதேனும் தொற்று ஏற்பட்டால் அது பற்களின் வேர்ப்பகுதி வரை சென்று பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுப்பதற்கு இதனை பயன்படுத்தலாம்.
Advertisment
Advertisements
இது தவிர சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் ஈறு வீக்கத்தையும் இந்த மருந்துகள் குணப்படுத்துகின்றன. இத்தகைய மருத்துவ குணம் வாய்ந்த இந்த இரண்டு பொருட்களையும் பயன்படுத்தி பல் தேய்க்கலாம் என்று மருத்துவர் மாயவன் செந்தில் குமார் அறிவுறுத்துகிறார்.
எனினும், பல் வலியின் பாதிப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நன்றி - Lifetuner Tamil Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.