தொடர்ச்சியாக லிப்ஸ்டிக் பயன்படுத்துபவர்களுக்கு உதடுகள் எளிதாக கருமை நிறத்திற்கு மாறும் வாய்ப்பு இருக்கிறது. இதனை போக்குவதற்கு ஹோம் ரெமிடி என்னவென்று தற்போது பார்க்கலாம்.
ஃப்ரெஷ்ஷான பீட்ரூட் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் தோலை சீவி சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு அரை கப் பசும்பால் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். பின்னர், அரைத்து எடுத்த பீட்ரூட்டை வடிகட்டி சாறு எடுக்க வேண்டும். இப்படி செய்தால் அரை கப் அளவிற்கு பீட்ரூட் சாறு கிடைத்து விடும்.
இதையடுத்து, ஒரு பாத்திரத்தில் அரை ஸ்பூன் அளவிற்கு சர்க்கரை, கால் டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் மற்றும் தேன் ஆகியவை சேர்த்து கலக்க வேண்டும். மறுபுறம், பீட்ரூட் சாறை அடுப்பில் வைத்து சிறிதளவு சூடு படுத்த வேண்டும். இதை சூடு படுத்தும் போதே ஒரு ஸ்பூன் சுத்தமான நெய் சேர்க்க வேண்டும்.
இந்தக் கலவையை அடுப்பில் இருந்து எடுத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். இந்த பாத்திரத்தை ஃப்ரிட்ஜின் ஃப்ரீசர் பகுதியில் சுமார் 2 மணி நேரம் வைக்க வேண்டும். இப்போது பீட்ரூட் சாறு இறுகி விடும்.
இப்போது, சர்க்கரை, தேன், மஞ்சள் ஆகியவற்றை கொண்டு செய்த கலவையை நம் உதட்டில் நன்றாக தேய்க்க வேண்டும். சில நிமிடங்கள் கழித்து இதை துடைத்து விடலாம். இது ஒரு ஸ்க்ரப்பர் போன்று செயல்பட்டு டெட் செல்களை நீக்கி விடும்.
இறுதியாக ஃப்ரீசரில் இருந்து எடுத்த பீட்ரூட் கலவையை உதட்டில் தடவலாம். இப்போது உங்கள் உதடுகள் பார்ப்பதற்கு பிங்க் நிறத்தில் காட்சியளிக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.