வாய் துர்நாற்றத்தால் மற்றவர்களிடம் பேச கூச்சமா? ஒரே நொடியில் எளிய தீர்வு இவைதான்; டாக்டர் ராஜலெட்சுமி
வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான காரணம் குறித்து மருத்துவர் ராஜலட்சுமி விளக்கம் அளித்துள்ளார். மேலும், அதற்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான காரணம் குறித்து மருத்துவர் ராஜலட்சுமி விளக்கம் அளித்துள்ளார். மேலும், அதற்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக, வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற சல்ஃபர் இருக்கும் உணவுகளை சாப்பிடும் போது சிலருக்கு வாய் துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய சூழலில் இலவங்கம், புதினா அல்லது கொத்தமல்லி போன்றவற்றை வாயில் மெல்லலாம் என்று மருத்துவர் ராஜலட்சுமி கூறூகிறார்.
Advertisment
இது தவிர, காபி, டீ அல்லது மதுபானம் போன்றவற்றை அதிகமாக குடிக்கும் போது அவை வாயில் வறட்சிதன்மையை ஏற்படுத்தும். இதன் காரணமாக கெடுதல் உருவாக்கும் பாக்டீரியாக்கள் வளரும். அப்போது வாயில் துர்நாற்றம் வீசும். இதனால், மதுபானம் குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
வயிற்றில் அல்சர் மற்றும் உணவுக் குழாயில் புண் இருந்தால், வாயில் துர்நாற்றம் வீசும் என்று மருத்துவர் ராஜலட்சுமி கூறுகிறார். அந்த வகையில், இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம் வாய் துர்நாற்றத்தை குறைக்கலாம்.
கிராம்பு, இலவங்கம் ஆகியவை அடங்கிய மூலிகை பேஸ்ட் உபயோகித்து பல் துலக்குவது வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபட உதவும். மவுத் வாஷ் பயன்படுத்துவதற்கு பதிலாக திரிபலா பொடியை கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம் என்று மருத்துவர் ராஜலட்சுமி கூறுகிறார்.
Advertisment
Advertisements
இதேபோல், வீட்டிலேயே பல் பொடி தயாரித்து பயன்படுத்தலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார். அதன்படி, 45 கிராம் நாயுருவி சாம்பல், 45 கிராம் புதினா பொடி மற்றும் அதே அளவிற்கு திரிபலா பொடி எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், கருவேலம்பட்டை தூள், இலவங்கத் தூள், மாசிக்காய் பொடி ஆகியவை 15 கிராம் எடுத்துக் கொள்ளலாம். இறுதியாக, 5 கிராம் படிகாரம் மற்றும் இந்துப்பு சேர்த்து கலக்க வேண்டும். இதில், 5 மில்லி லிட்டர் கிராம்பு தைலம் சேர்க்கலாம்.
இந்தப் பல் பொடியை பயன்படுத்தி காலை மற்றும் மாலை என இருவேளையும் பல் துலக்க வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்தால் வாய் துர்நாற்றம் நீங்கும் என்று மருத்துவர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
நன்றி - Traditional Care Hospital Dr. D. Rajalakshmi Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.