கருஞ்சீரகம், சீரகத்தை அரைத்து இதில் சேர்த்து தடவுங்க… முகப்பரு மறையும்; டாக்டர் யோக வித்யா
முகப்பருக்களை போக்குவதற்கு சீரகம், கருஞ்சீரகம் மற்றும் பால் ஆகிய பொருட்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். அதனை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
முகப்பருக்களை போக்குவதற்கு சீரகம், கருஞ்சீரகம் மற்றும் பால் ஆகிய பொருட்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். அதனை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
இயற்கையாகவே பதின் பருவத்தில் இருப்பவர்களுக்கு முகத்தில் பருக்கள் அடிக்கடி வரும். உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக முகப்பரு ஏற்படுகிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனை நினைத்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
Advertisment
எனினும், குறிப்பிட்ட வயதைக் கடந்த பின்னரும் சிலருக்கு முகப்பருக்கள் இருக்கும். அதிகமாக வெயிலில் சுற்றுவதன் காரணமாகவும் முகப்பரு ஏற்படலாம். இதேபோல், சருமத்தை சுத்தமாக பராமரிக்காவிட்டாலும் முகப்பரு உருவாகும். மேலும், கடுமையான உடல் உஷ்ணம் காரணமாகவும் முகப்பரு வரக்கூடும்.
இந்த முகப்பருக்களை போக்குவதற்கு ஃபேஸ் க்ரீம் அல்லது சீரம் போன்ற பொருட்களை பயன்படுத்தலாம் என்று சிலர் கருதுவார்கள். ஆனால், அதில் இருக்கும் இரசாயனங்களால் ஒவ்வாமை, பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனை தடுக்கும் விதமாக இயற்கையான மூன்று பொருட்களை மட்டும் பயன்படுத்தி முகப்பருக்களை போக்கலாம் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். மேலும், இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
Advertisements
கருஞ்சீரகம் மற்றும் சீரகம் ஆகிய இரண்டையும் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை பாலில் கலந்து, முகப்பரு இருக்கும் இடத்தில் தடவலாம். இவ்வாறு செய்யும் போது முகப்பரு மறையத் தொடங்கும் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.
இவற்றில் இரசாயனங்கள் சேர்க்காததால் இதனை பயன்படுத்தும் போது ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பும் கிடையாது. வீட்டில் சாதாரணமாக இருக்கும் பொருட்களை உபயோகப்படுத்துவதால் அதிக செலவும் ஆகாது.
நன்றி - EthnicHealthCare Dr.B.YogaVidhya Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.