/indian-express-tamil/media/media_files/2025/09/30/download-64-2025-09-30-12-49-55.jpg)
இளநரை ஒரு நபரின் தன்னம்பிக்கையை குறைக்கக்கூடிய ஒன்றாக அமைகிறது என்பதில் ஐயமில்லை. இளநரைக்கான தீர்வுகளை தேட துவங்குவதற்கு முன் அதற்கான காரணத்தை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். சரியான காரணத்தை தெரிந்து கொண்டால் மட்டுமே, அதற்கேற்ப சரியான தீர்வுகளை நம்மால் பெற இயலும். இளநரை என்பது மரபணு, சுற்றுச்சூழல் வெளிப்பாடுகள் மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் போன்ற பல காரணங்களால் தூண்டப்படலாம்.
மன அழுத்தம் மற்றும் பதட்டம்: நாள்பட்ட மன அழுத்தமும், பதட்டமும் தலை முடியை விரைவாகவே நரைப்பதற்கு வழிவகுக்கும். அதிகப்படியான மன அழுத்த அளவுகள் தலைமுடியின் கருப்பு நிறத்திற்கு காரணமான மெலனோசைட்டுகள் குறைவதற்கு வழிவகுப்பதாலேயே இது ஏற்படுகிறது.
ஊட்டச்சத்து குறைபாடு: அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். குறிப்பாக B12 ஃபோலிக் அமிலம் போன்ற வைட்டமின்கள், இரும்புச்சத்து, காப்பர் மற்றும் சிங்க் போன்ற மினரல்கள் இளநரையை தடுப்பதற்கு உதவக்கூடிய சில ஊட்டச்சத்துக்கள்.
புகைப்பிடித்தல்: புகைப்பிடித்தல் இளநரையோடு தொடர்புடையதாக அமைகிறது. தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் அடங்கிய சிகரெட் ஹேர் ஃபாலிக்கல்களை சேதமடைய செய்து மெலனின் உற்பத்தியை சீர்குலைக்கிறது.
அதிகப்படியாக மது அருந்துதல்: அளவுக்கு மீறி தினமும் மது அருந்தும் நபர்களுக்கு இளநரை விரைவாக ஏற்படலாம். நமது உடலுக்கு அவசியமான ஊட்டச்சத்துக்களை குறைத்து, அத்தியாவசியமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உறிஞ்சப்படுவதை மது பானங்கள் தடுக்கிறது. இது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு கேடு விளைவித்து இளநரையை ஏற்படுத்துகிறது.
மோசமான தூக்க அட்டவணை: போதுமான அளவு தூக்கம் இல்லாமை அல்லது தரமான தூக்கம் பெற முடியாதவர்களுக்கு இளநரை ஏற்படலாம். குறைவான தூக்கம் பல்வேறு உடல் செயல்பாடுகளை பாதிப்பது மட்டுமல்லாமல் தலைமுடியின் ஆரோக்கியத்துடனும் தொடர்புடையதாக இருக்கிறது.
இந்த பிரெச்சனையை சரி செய்வதற்கு ஒரு எளிய வீட்டு வைத்தியம் பற்றி பார்க்கலாம்.
அரிசி தண்ணீரும் காபி தூளும்
உங்கள் வீட்டில் அரிசி வடித்த காஞ்சி இருந்தால் அதை ஒரு பவுலில் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் காபி தூள் சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் கொஞ்சம் நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு சேர்த்து கலக்கவும். ஷாம்பு இல்லையென்றால் நீங்கள் சீகைக்காய் போடி கூட சேர்த்துக்கொள்ளலாம். இந்த கலவையை தலை குளிக்கும் பொது உங்கள் முடிக்கு பயன்படுத்தினால் இள நரை பிரச்னை அப்படியே குறைந்துவிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.