பலருக்கு சருமத்தில் இருக்கும் பிரச்சனைகள் காரணமாக மருக்கள் தோன்றும். இவற்றை மருத்துவமனைகள் அல்லது பியூட்டி பார்லருக்கு சென்று அகற்றலாம் என சிலர் சிந்திப்பார்கள் ஆனால், அதற்கு ஏராளமான பணம் செலவாகுமோ என்ற தயக்கமும் இருக்கும்.
அந்த வகையில் வீட்டு வைத்தியத்தில் எவ்வாறு மருக்களை அகற்றலாம் எனக் காண்போம். சின்ன வெங்காயத்தை சிறிதாக வெட்டி எடுத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து எடுக்க வேண்டும். இதில் இருந்து அரை ஸ்பூன் சாறு எடுத்துக் கொள்ளலாம்.
இந்த வெங்காய சாறுடன் தூள் உப்பை சேர்த்து பசை பதத்திற்கு வரும் வரை கலக்க வேண்டும். இதன் பின்னர், காட்டனை சிறிய துண்டாக எடுத்து வெங்காய சாறில் நனைத்து மருவின் மீது ஒத்தடம் கொடுப்பதை போன்று வைக்க வேண்டும். இப்படி சாறு முற்றிலும் தீரும் வரை மருவின் மீது வைக்க வேண்டும். இதையடுத்து, அந்த காட்டனை மருவின் மீது பிளாஸ்தர் போட்டு ஒட்டி விடலாம்.
இறுதியாக சுமார் 7 மணி நேரம் கழித்து அந்த காட்டனை எடுக்கும் போது, மருவும் சேர்ந்து நீங்கி விடும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.