உணவு முறை மாற்றம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவை இளம் தலைமுறையினரிடையே அதிகமாக காணப்படுகிறது. இவை உடல்நல பாதிப்புகளிக்கும் அடிக்கடி வழிவகுக்கிறது. குறிப்பாக வயிறு தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவதாக பலரும் கூறுகிறார்கள்.
சரியாக உணவு எடுத்துக் கொள்ளாததும், சரியான நேரத்தில் உணவு சாப்பிடாததும் வயிற்று வலியை ஏற்படுத்தக் கூடும். ஆரம்ப நிலையில் இருக்கும் வயிற்று வலியை எளிமையான வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்தலாம் என வல்லுரர்கள் கூறுகின்றனர்.
அதனடிப்படையில், கொதிக்கும் தண்ணீர் ஒரு கப் எடுத்து, அதனுடன் ஒரு டீஸ்பூன் தேனை கலக்க வேண்டும். வெந்நீருடன் கலக்கப்பட்ட தேன் ஆறியதும், அதனை குடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வயிற்று வலி மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும் எனக் கூறப்படுகிறது.
இதேபோல், வயிற்றில் எரிச்சல் இருப்பவர்கள் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக 2 டீஸ்பூன் தேன் குடித்தால், எரிச்சல் பிரச்சனை நீங்கும் என்று கூறுகின்றனர்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“