வீட்டில் நல்ல நறுமணம் வீச வேண்டுமா? அப்போ வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இதுமாதிரியான ஏர் ஃபிரஷ்னர் செய்து பாருங்கள்.
சிலரது வீடுகளில் எவ்வளவு தான் சுத்தம் செய்தாலும் துர்நாற்றம் வீசிக் கொண்டுதான் இருக்கும் அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் மிகவும் சிம்பிளான பொருட்கள் வைத்து ஏர் ஃபிரஷ்னர். அதற்கான வெவ்வேறு நறுமணம் கொண்ட ஏர் ஃபிரஷ்ணர்கள் செய்முறை இதோ:
தேவையான பொருட்கள்:
சோடா உப்பு அல்லது கல் உப்பு
எலுமிச்சை பழம்
பிளாஸ்டிக் / கண்ணாடி கப்புகள்
கம்ஃபோர்ட்
எஸ்ஸன்ஸ்
கிராம்பு
செய்முறை 1
சின்ன டப்பாவில் 3 ஸ்பூன் பேக்கிங் சோடா போட்டு அதனுடன் ஏதேனும் ஒரு எஸ்ஸன்ஸ் கலந்து நன்றாக மூடி அறையில் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். மூடியில் சிறுசிறு துளைகள் இட வேண்டும்.
செய்முறை 2
ஒரு எலுமிச்சைப் பழத்தை சிறிது சிறிதாக நறுக்கி மிக்ஸியில் அறைத்து கப்பில் எடுத்து கொள்ளவும் அதனுடன் உப்பு அல்லது சோடா உப்பு கலந்து மூடி போட்டு வைத்க்க வேண்டும்.
செய்முறை 3
ஒரு டப்பாவில் பாதி அளவிற்கு கல் உப்பு சேர்த்து அரை மூடி கம்போர்ட் ஊற்றி நன்றாக கலந்து அதில் கொஞ்சமாக கிராம்பு சேர்த்து துளையிடப்பட்ட பேப்பர் அல்லது மெல்லிசான துணிகளால் கட்டி அறையில் ஓரமாக வைக்கலாம். இதுமாதிரியான ஏர் ஃப்ரஷ்னர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வாசனை தரும் ஆனால் 48 நாட்களுக்கு பயன்படுத்தலாம்
(( பேக்கிங் சோடாவுக்கு துர்நாற்றத்தை உறிஞ்சி, நல்ல நறுமணத்தை கொடுக்கும் தன்மை உள்ளது. பேக்கிங் சோடாவிற்கு பதிலாக கல் உப்பையும் சேர்த்துக் கொள்ளலாம்.))
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“