நீங்கள் ஆரோக்கியமான உணவைத் தயாரிப்பதில் நேரத்தையும், பணத்தையும், சக்தியையும் செலவழித்தால், உங்கள் சமையலறையை சுத்தமாக வைத்திருக்க ஏன் கடுமையான, தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைப் பயன்படுத்துகிறீர்கள்?
உங்கள் உணவை மாசுபடுத்தக்கூடிய மோசமான இரசாயனங்களை பயன்படுத்தாமல் உங்கள் சமையலறையை சுத்தம் செய்ய ஏராளமான வழிகள் உள்ளன.
உங்கள் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த அனைத்து இயற்கை தீர்வுகளைப் பயன்படுத்தி’ உங்கள் சமையலறையை எவ்வாறு சுத்தம் செய்வது என்பது குறித்த சில குறிப்புகள் இங்கே உள்ளன.
ஆல் நேச்சுரல் கிச்சன் க்ளென்சர் செய்வது எப்படி?
உங்களுக்கு தேவையான பொருட்கள்
1 கப் காய்ச்சி வடிகட்டிய வெள்ளை வினிகர்
1 கப் தண்ணீர்
3 சொட்டு டீ ட்ரீ எண்ணெய்
3 சொட்டு கிரேப்ஸ் எண்ணெய்
ஸ்ப்ரே இணைப்புடன் கூடிய பாட்டில்
எப்படி செய்வது?
ஸ்பிரே பாட்டிலில்’ வினிகரை ஊற்றவும், பின்னர் தண்ணீர் ஊற்றவும். தேவைப்பட்டால் ஒரு சிறிய புனல் பயன்படுத்தவும்.
மெதுவாக மூன்று சொட்டு டீ ட்ரீ எண்ணெய் மற்றும் மூன்று சொட்டு கிரேப்ஸ் எண்ணெய் பாட்டிலில் ஊற்றவும்.
பயன்படுத்துவதற்கு முன், அனைத்து பொருட்களையும் நன்கு கலக்க பாட்டிலை தீவிரமாக குலுக்கவும்.
நேரடியாக கிச்சன் மேற்பரப்பில் அல்லது கிச்சன் துண்டு மீது தெளித்து, பகுதியை சுத்தமாக துடைக்கவும்.
குறிப்பு
எண்ணெய் பாட்டிலின் மேற்புறத்தில் உட்கார முனைகின்றன, எனவே எந்த பரப்புகளிலும் தெளிப்பதற்கு முன் தீவிரமாக குலுக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“