தேங்காய் கெட்டுப் போச்சா? கவலையை விடுங்க... இப்படி செய்து சுத்தமான எண்ணெய் எடுக்கலாம்!
கெட்டுப் போன தேங்காய்களை கொண்டு எப்படி வீட்டிலேயே சுத்தமான தேங்காய் எண்ணெய் தயாரிக்கலாம் என்று இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இதன் செயல்முறை ஈசியாக இருக்கும்.
கெட்டுப் போன தேங்காய்களை கொண்டு எப்படி வீட்டிலேயே சுத்தமான தேங்காய் எண்ணெய் தயாரிக்கலாம் என்று இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இதன் செயல்முறை ஈசியாக இருக்கும்.
வீட்டில் சமையலுக்காக வாங்கும் தேங்காய்கள் கெட்டுப் போனால், அவற்றை தூக்கி குப்பையில் போடுவோம். ஆனால், இனி அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கெட்டுப் போன தேங்காயில் இருந்து, தேங்காய் எண்ணெய்யை எப்படி தயாரிப்பது என்று தற்போது காணலாம்.
Advertisment
கெட்டுப் போன தேங்காய்களை குக்கரில் போட வேண்டும். இதில் அரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். இதன் மூலம் தேங்காயில் இருந்து கெட்ட வாடையை நீக்க முடியும்.
இதையடுத்து, வேக வைத்த தேங்காய்களை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளலாம். இவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து தேங்காய் பாலை மட்டும் வடிகட்டி எடுக்க வேண்டும். இதன் பின்னர், தேங்காய் சக்கையை மீண்டும் மிக்ஸியில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.
இப்போது, மீண்டும் தேங்காய் பாலை வடிகட்டி எடுத்து, அதனை ஃப்ரீசரில் ஒரு மணி நேரம் வைக்க வேண்டும். இதன் பின்னர், தேங்காய் பாலில் இருந்து கொழுப்பை தனியாக பிரிக்க வேண்டும். இனி அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தேங்காய் பால் கொழுப்பை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
Advertisment
Advertisements
இப்படி 10 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்தால், அதில் இருந்து தேங்காய் எண்ணெய் கிடைத்து விடும். கடைகளில் இருந்து வாங்கி பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய்யை விட, இதில் அதிக சத்துகள் இருக்கும்.
எனவே, கெட்டுப் போன தேங்காயில் இருந்து கூட எண்ணெய்யை பிரித்து எடுப்பதன் மூலம், அதனை வீணாக்காமல் பயனுள்ள வகையில் உபயோகப்படுத்தலாம்.