சின்ன வெங்காயத்துடன், அரிசி தண்ணீர்; முடிக்கு தேவையான சூப்பர் கண்டிஷனர் ரெடி!
சின்ன வெங்காயம் மற்றும் அரிசி தண்ணீர் இரண்டையும் சேர்த்து தலை முடிக்கு தேவையான கண்டிஷனர் எப்படி செய்வது என இக்குறிப்பில் பார்க்கலாம். இது முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.
முடி உதிர்வு என்பது அழகியல் சார்ந்த பிரச்சனை என பலர் கருதுகின்றனர். ஆனால், ஆரோக்கியத்தில் குறைபாடு இருக்கும்பட்சத்தில் அதன் முதல் அறிகுறியாக முடி உதிர்வு இருக்கக் கூடும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்கவில்லை என்றால் முடி உதிர்வு ஏற்படும்.
Advertisment
குறிப்பாக, புரதம் மற்றும் பையோட்டின் குறைபாடு இருப்பவர்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை இருக்கும். இது தவிர பொடுகு, தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் அதீத வேலை நேரம் போன்ற காரணங்களாலும் முடி உதிர்வு ஏற்படலாம். எனவே, இவற்றை சரி செய்வதன் மூலம் முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.
சத்தான உணவுகள், சீரான உறக்கம் கொண்டு முடி உதிர்வை தடுப்பது போன்று வெளிப்புறத்தில் ஹேர்பேக் பயன்படுத்தியும் முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம். இதற்காக நிறைய பணம் செலவளித்து இரசாயனங்கள் கலந்த ஷாம்பூக்கள், ஹேர் சீரம் ஆகியவற்றை தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்கு மாற்றாக நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு நாமே ஹேர் பேக் தயாரித்துக் கொள்ள முடியும்.
அதன்படி, முடி வளர்ச்சிக்கு சின்ன வெங்காயம் பெரிதும் பயன்படும். நம் தலைமுடிக்கு தேவையான அளவிற்கு சின்ன வெங்காயத்தை அரைத்து அதன் சாறை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை அரிசி ஊற வைத்த தண்ணீருடன் சேர்த்து கலந்தால் சூப்பரான கண்டிஷனர் தயாராகி விடும். இந்த கண்டிஷனரை தலையில் தேய்த்து, சுமார் 20 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம்.
Advertisment
Advertisements
இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். இதில் இரசாயனங்கள் சேர்க்காததால் ஒவ்வாமை ஏற்படும் என்று அச்சப்படவும் தேவையில்லை.
நன்றி - Sarans Hospitals Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.