இனி கடைகளில் வாங்க வேண்டாம்; இந்த இலையை வைத்து வீட்டிலேயே கண்டிஷனரை செய்ய முடியும்!
செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகளை கொண்டு ஹேர் கண்டிஷனரை எப்படி வீட்டிலேயே தயாரிக்கலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இது நம் முடியை சாஃப்டாக பராமரிக்க பெரிதும் உதவி செய்கிறது.
செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகளை கொண்டு ஹேர் கண்டிஷனரை எப்படி வீட்டிலேயே தயாரிக்கலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இது நம் முடியை சாஃப்டாக பராமரிக்க பெரிதும் உதவி செய்கிறது.
தலை முடியை சீராக பராமரிக்க வேண்டுமென்றால் வாரத்திற்கு மூன்று முறையாவது ஷம்பு பயன்படுத்த வேண்டும் என்று பலருக்கும் தெரியும். ஆனால், தலை முடி பராமரிப்பில் முக்கிய இடம் வகிக்கும் ஒரு பொருள் குறித்து பெரிய அளவில் யாருக்கும் தெரிவதில்லை.
Advertisment
அந்த வகையில் தலை முடி உதிர்வை கட்டுப்படுத்தி சரியாக பராமரிக்க வேண்டுமென்றால் கண்டிஷனர் பயன்படுத்த நாம் பழக வேண்டும். சாதாரணமாக ஷம்பு மட்டும் பயன்படுத்தி குளிக்கும் வழக்கம் தான் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் ஷம்பு பயன்படுத்திய பின்னர் முடி வறட்சியாக இருக்கும்.
அதிகப்படியான வறட்சித் தன்மை இருந்தால், அதுவும் முடி உதிர்வுக்கு காரணமாகி விடும். மேலும், முடி வறட்சியாக இருந்தால் பொடுகு உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஷம்பு உபயோகப்படுத்தியும் எந்தப் பயனும் இல்லாமல் போய் விடும்.
இதனை சரி செய்வதற்காக தான் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும் என வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். இவை தலை முடியை சாஃப்டாக மாற்றி வறட்சி ஆவதை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் முடி உதிர்வு பிரச்சனை குறையும்.
Advertisment
Advertisements
எனினும், கண்டிஷனரில் அதிகமான இரசாயனங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். அந்த வகையில் இரசயானங்களே இல்லாமல் வீட்டிலேயே கண்டிஷனரை தயாரித்து நாம் பயன்படுத்தலாம். இதனை செய்வதும் மிக சுலபமாக இருக்கும்.
இதற்காக நம் தலை முடிக்கு தேவையான அளவு செம்பருத்தி இலைகள் மற்றும் பூவை எடுத்து சாதம் வடித்த கஞ்சியுடன் சேர்த்து அரைக்க வேண்டும். இப்படி செய்தால் சூப்பரான ஹோம்மேட் கண்டிஷனர் தயாராகி விடும். இதனை ஷம்பு பயன்படுத்திய பின்னர், நம் தலை முடியில் தேய்த்து விட்டு பின்னர் கழுவி விடலாம்.
இப்படி செய்தால் நம் தலை முடி பளபளப்பாகவும், சாஃப்டாகவும் இருக்கும். மேலும், கூடுமானவரை முடி உதிர்வையும் இது கட்டுப்படுத்தும்.
நன்றி - Say Swag Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.