/indian-express-tamil/media/media_files/2025/04/14/59io8fjxxuC1zpBPd077.jpg)
பொதுவாக பதின் பருவத்தில் இருப்பவர்களுக்கு முகத்தில் பருக்கள் இருப்பது இயற்கையான விஷயம் தான். உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக முகப்பரு ஏற்படுகிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனை நினைத்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
எனினும், குறிப்பிட்ட வயதைக் கடந்த பின்னரும் சிலருக்கு முகப்பருக்கள் இருக்கும். அதிகமாக வெயிலில் சுற்றுவதன் காரணமாகவும் முகப்பரு ஏற்படலாம். இதேபோல், சருமத்தை சுத்தமாக பராமரிக்காவிட்டாலும் முகப்பரு உருவாகும். மேலும், கடுமையான உடல் உஷ்ணம் காரணமாகவும் முகப்பரு வரக்கூடும்.
அந்த வகையில், முகப்பருக்கள் வந்தால் அவை சரியான பின்னரும் அந்த தடம் அப்படியே இருக்கும். இந்தப் பருக்களை போக்குவதற்கு ஃபேஸ் க்ரீம் அல்லது சீரம் போன்ற பொருட்களை பயன்படுத்தலாம் என்று சிலர் கருதுவார்கள். ஆனால், அதில் இருக்கும் இரசாயனங்களால் ஒவ்வாமை, பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதை தடுக்கும் வகையில் வீட்டிலேயே ஒரு ஃபேஸ் க்ரீமை ஈசியாக செய்து பயன்படுத்தலாம். இதற்காக நம் முகத்திற்கு தேவையான அளவு கடலை மாவு, மஞ்சள் பொடி, தேன் மற்றும் பால் ஆகிய அனைத்தையும் சேர்த்து பசை பதத்திற்கு கலக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நம் முகத்திற்கு தேவையான ஃபேஸ் க்ரீம் ரெடியாகி விடும்.
இந்தக் க்ரீமை முகத்தில் தேய்த்து விட்டு, சுமார் 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இப்படி தொடர்ச்சியாக செய்யும் போது முகத்தில் இருக்கும் பருக்கள் மறையத் தொடங்கும்.
நன்றி - Chittukuruvii Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.