முகத்தை பராமரிப்பதற்காக பல விதமான க்ரீம்களை இன்றைய சூழலில் பயன்படுத்துகிறோம். இவற்றில் அதிகளவு இரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருப்பதால், சில நேரத்தில் பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. மேலும், இது போன்ற க்ரீம்கள் விலை அதிகமாக இருக்கும். இதற்காகவே, இரசாயனம் கலக்காத ஹோம்மேட் ஃபேஸ் க்ரீம் தயாரித்து பயன்படுத்தலாம்.
அதன்படி, ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சு பழ தோல்களை போட்டு, அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து, அந்த பாத்திரத்தை மூடி அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரின் நிறம் மாறும் வரை இதை கொதிக்க வைத்து பின்னர், அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
இந்த தண்ணீர் ஆறியதும் ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைக்க வேண்டும். இப்போது ஒரு பாத்திரத்தில் ஒன்றரை ஸ்பூன் அரிசி மாவு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவும் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் மற்றும் கொதிக்க விட்டு எடுத்து ஆரஞ்சு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து பசை பதத்திற்கு கலக்க வேண்டும்.
அதன் பின்னர் இறுதியாக சிறிதளவு தேன் சேர்த்து இந்த க்ரீமை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து, 5 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடலாம். இப்படி செய்தால் முகம் பொலிவாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.