2 கப் அரிசியை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து கழுவ வேண்டும். அவ்வாறு கழுவிய பின்னர், அரிசியை சற்று சூடான நீரில் 5 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
5 மணி நேரத்திற்கு பின்னர் அரிசியை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், வடிகட்டிய அரிசியை மிக்ஸியில் போட்டு சூடான தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். இதையடுத்து, அரிசி மாவை தனியாக வடிகட்டி எடுக்க வேண்டும்.
இதனை ஒரு புறம் வைத்து விட்டு, ஒரு சிறிய பாத்திரத்தில் 5 ஸ்பூன் அளவு கற்றாழை ஜெல்லை எடுக்க வேண்டும். இந்த கற்றாழை ஜெல்லுடன் முதலில் எடுத்து வைத்த அரிசி மாவை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இவற்றை கலக்கும் போது ரைஸ் ஜெர்ம் ஆயில் மற்றும் வைட்டமின் இ ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக கிரீம் பதத்திற்கு வரும் வரை மீண்டும் கலக்க வேண்டும்.
இந்தக் கிரீமை தனியாக பாட்டிலில் அடைத்து தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தலாம். இந்த கிரீம் சுமார் 3 வாரங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். இதை பயன்படுத்துவதன் மூலம் சருமம் பொலிவாக காணப்படும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.