இனி பியூட்டிபார்லர் வேண்டாம்: ரேடியண்ட் மற்றும் க்ளோயிங் சருமத்துக்கு சூப்பரான பேஸ்-பேக் இதோ!

100 சதவீதம் இயற்கையாக இருந்தாலும், எந்தவொரு மூலப்பொருளும் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தவில்லை இல்லை என்பதை உறுதிப்படுத்த முதலில் பேட்ச் டெஸ்ட் செய்து கொள்ளுங்கள் என அழகு நிபுணர் கவிதா கோசா கூறுகிறார்.

தோல் பராமரிப்பு என்று வரும்போது, ​​ரசாயனம் கலந்த பொருட்களைத் தவிர்ப்பது நல்லது, அதற்கு பதிலாக, இயற்கையானதை தேர்வு செய்யுங்கள்.

இந்தியாவின் பண்டைய வேத கலாச்சாரத்தில் வேரூன்றிய ஆயுர்வேத தோல் பராமரிப்பு வழக்கத்தின் மந்திரத்தை எதுவும் வெல்ல முடியாது என்று டாடா ஸ்கை பியூட்டியில் ஆர்கானிக் தோல் பராமரிப்பு நிபுணரும், ப்யூரேர்த் நிறுவனருமான கவிதா கோசா விளக்கினார்..

ரசாயனம் இல்லாத மேக்-ஓவருக்கு நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய இரண்டு இயற்கையான ஃபேஸ் பேக்குகளை பார்க்கலாம்.

டிடாக்ஸ் ஃபேஸ்மாஸ்க்

புத்துணர்ச்சி பெறவும், பளபளப்பான சருமத்தைப் பெறவும், டிடாக்ஸ் ஃபேஸ் மாஸ்க்கைப் கவிதா பரிந்துரைக்கிறார்.

தேவையான பொருட்கள்

 • ½ தேக்கரண்டி – மஞ்சள்தூள்
 • 1 டீஸ்பூன் – வேப்பம்பூ தூள்
 • 1 தேக்கரண்டி – முருங்கை தூள்
 • 1 தேக்கரண்டி – அதிமதுரம்
 • 1 தேக்கரண்டி – மஞ்சட்டி (Majishtha)
 • 3 தேக்கரண்டி – முல்தானி மிட்டி
 • 1 தேக்கரண்டி – தேன்
 • 2-3 தேக்கரண்டி – பால் மற்றும் தண்ணீர்

செய்முறை:

அனைத்து பொருட்களையும் கலந்து உங்கள் முகத்தில் சமமாக தடவவும். உங்கள் ஃபேஸ்-மாஸ்க் வெடிக்க ஆரம்பித்தவுடன் அதை அகற்ற எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். அதை முழுமையாக உலர விடாதீர்கள், ஏனெனில் இது உங்கள் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை நீக்குகிறது.

முகப்பரு எதிர்ப்பு மாஸ்க் (Anti-Acne Mask)

முகப்பருவைக் கையாளும் டீனேஜர்கள் இரசாயனங்கள் நிறைந்த பொருட்களைத் தவிர்த்து, ஆயுர்வேத தீர்வுகளைப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும் என்கிறார் கவிதா.

தேவையான பொருட்கள்

 • 1 தேக்கரண்டி – மஞ்சள்தூள்
 • 1 டீஸ்பூன் – வேப்பம்பூ தூள்
 • 2 தேக்கரண்டி – முல்தானி மிட்டி
 • ½ தேக்கரண்டி – மஞ்சட்டி
 • 3-4 தேக்கரண்டி – பால்
 • 1 தேக்கரண்டி – தண்ணீர்

செய்முறை

அனைத்து பொருட்களையும் கலந்து உங்கள் முகத்தில் சமமாக தடவவும். பிறகு, 10 நிமிடங்கள் கழித்து, அதை வெதுவெதுப்பான நீரில் நனைத்த துணியால் துடைக்கவும். சிறந்த முடிவுகளுக்கு, வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை பயன்படுத்தவும்.

இந்த ரெசிபிகள் இயற்கையான பொருட்களை உள்ளடக்கியிருந்தாலும், ஏதேனும் மூலப்பொருள் உங்களுக்கு அலர்ஜி ஏற்படுத்துகிறதா என்பதைச் சரிபார்க்க வேண்டியது அவசியம். எனவே, இந்த ரெசிபிகளை முயற்சிக்கும் முன் உங்கள் கை அல்லது தொடைகளில் பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Homemade face face packs for glowing skin

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express