சில நிமிடத்தில் உங்க முகத்தை பளிச்சென மாற்றும் சிம்பிளான ஃபேஸ்பேக்; இப்படி யூஸ் பண்ணுங்க!
நம் முகத்தை இன்ஸ்டன்ட் பொலிவாக மாற்றும் சிம்பிளான ஃபேஸ்பேக்கை எப்படி தயாரிப்பது என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். இதனை நம் வீட்டில் இருக்கும் சிம்பிளான பொருட்களைக் கொண்டு ஈசியாக செய்ய முடியும்.
நம் முகத்தை இன்ஸ்டன்ட் பொலிவாக மாற்றும் சிம்பிளான ஃபேஸ்பேக்கை எப்படி தயாரிப்பது என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். இதனை நம் வீட்டில் இருக்கும் சிம்பிளான பொருட்களைக் கொண்டு ஈசியாக செய்ய முடியும்.
பார்ப்பதற்கு எப்போதும் பொலிவாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். குறிப்பாக, ஏதாவது முக்கிய நிகழ்வுகள், விசேஷங்கள் போன்றவற்றுக்கு செல்லும் போது கூடுதல் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்போம்.
Advertisment
இதற்காக பியூட்டி பார்லருக்கு செல்லும் பழக்கத்தை சிலர் கடைபிடிப்பார்கள். எனினும், எல்லோராலும் அடிக்கடி பியூட்டி பார்லருக்கு செல்ல முடியாது. மேலும், அங்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் கலந்திருக்கும் இரசாயனங்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும் என பலருக்கு அச்சம் இருக்கும்.
அந்த வகையில் நம் வீட்டிலேயே சூப்பரான ஃபேஸ்பேக் தயாரித்து பயன்படுத்தலாம். குறிப்பாக, முக்கிய நிகழ்வுகளுக்கு செல்லும் முன்னர் இந்த ஃபேஸ்பேக்கை உபயோகப்படுத்தினால், உங்கள் முகம் பார்ப்பதற்கு கூடுதல் அழகாக இருக்கும். இதற்காக வீட்டில் இருக்கும் சிம்பிளான பொருட்களை பயன்படுத்தலாம்.
அதன்படி, ஒரு பாத்திரத்தில் நம் முகத்திற்கு தேவையான அளவு அரிசி மாவு, ஒரு ஸ்பூன் தேன், சிறிதளவு சர்க்கரை மற்றும் கொஞ்சமாக தக்காளி சாறு ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இப்படி செய்தால் சூப்பரான ஃபேஸ்பேக் ரெடியாகி விடும்.
Advertisment
Advertisements
இதனை நம் முகத்தில் தடவி விட்டு சுமார் 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இப்படி செய்தால் நம் முகம் பார்ப்பதற்கு இன்ஸ்டன்ட் பொலிவாக மாறி விடும். எனவே, முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு முன்பாக இந்த ஃபேஸ்பேக்கை ட்ரை செய்து பார்க்கலாம்.
நன்றி - KN SMILEY Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.