சிலருக்கு முகம் மற்றும் கழுத்து பகுதிகள் கருமையாக காணப்படும். இதனை போக்குவதற்கு பியூட்டி பார்லர்களுக்கு சென்று நிறைய ஃபேஷியலும் செய்து பார்த்திருப்போம். ஆனால், சில நாட்களிலேயே இவை மீண்டும் தோன்றும். அதற்காக அடிக்கடி பியூட்டி பார்லர் செல்வதும் சிரமமான காரியம்.
மேலும், கருமையை போக்குவதற்கு பயன்படுத்தும் ஃபேஸ் கிரீம்களிலும் இரசாயானங்கள் கலந்திருப்பதால், இவற்றை பயன்படுத்தும் போது ஒவ்வாமை ஏற்படும் சாத்தியக் கூறுகளும் இருக்கிறது. அந்த வகையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சூப்பரான ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று தற்போது பார்க்கலாம்.
ஒரு சிறிய உருளைக் கிழங்கின் தோலை நீக்கி விட்டு, நம் முகத்திற்கு தேவையான அளவு அதை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் இரண்டு ஸ்பூன் அரிசி மாவு மற்றும் பால் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இந்தக் கலவையுடன் இரண்டு ஸ்பூன் பச்சை பயிறு மாவும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் ஹோம்மேட் ஃபேஸ்பேக் தயாராகி விடும். இதனை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின்னர், சுமார் 15 நிமிடங்கள் கழித்து இதைக் கழுவி விடலாம். இந்த ஃபேஸ்பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினால் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் இருக்கும் கருமை நீங்கி விடும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.