வெயிலின் காரணமாக முகம் சோர்வாக இருக்கிறதா? 15 நிமிடங்களில் பொலிவாக மாற்றலாம்; இந்த ஃபேஸ்பேக்கை யூஸ் பண்ணுங்க!
வெயிலின் தாக்கத்தால் முகம் சோர்வாக இருக்கும் போது, இந்த சிம்பிளான ஹோம்மேட் ஃபேஸ்பேக்கை யூஸ் பண்ணுங்க. 15 நிமிடங்களில் உங்களுடைய முகம் பார்ப்பதற்கு பொலிவாக மாறி விடும்.
வெயிலின் தாக்கத்தால் முகம் சோர்வாக இருக்கும் போது, இந்த சிம்பிளான ஹோம்மேட் ஃபேஸ்பேக்கை யூஸ் பண்ணுங்க. 15 நிமிடங்களில் உங்களுடைய முகம் பார்ப்பதற்கு பொலிவாக மாறி விடும்.
கோடை காலம் தொடங்கி விட்டதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் தினசரி பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வெயில் அதிகரிப்பதால் உடலில் நீர்ச்சத்தும் குறைந்து போகும் அபாயம் இருக்கிறது.
Advertisment
நீர்ச்சத்து குறையும் போது அவை பல்வேறு பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். முக்கியமாக சருமம் மிகவும் வறட்சியாகி விடும். மேலும், அதீத வெயில் முகத்தை கருமை அடையச் செய்யும். எனவே, போதுமான அளவு நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் சாப்பிட்டு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுரை கூறுகின்றனர்.
இது தவிர ஒரு சரும பராமரிப்பு முறையை பின்பற்றினால் பருக்கள், வியர்க்குரு போன்றவற்றில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும். இதற்காக ஃபேஸ் க்ரீம், டோனர் மற்றும் சீரம் போன்ற எத்தனையோ பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால், இவற்றில் அதிகப்படியாக இரசாயனம் கலந்திருப்பதால், இவை ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
எனவே, இயற்கையான முறையில் வீட்டிலேயே ஒரு ஃபேஸ்பேக் தயாரித்து பயன்படுத்தலாம். இதனை செய்வதற்கு அதிக நேரமும் எடுக்காது. 15 முதல் 20 நிமிடங்களில் இதனை செய்ய முடியும். இந்த ஃபேஸ்பேக் முகத்தை பொலிவாக மாற்றுவது மட்டுமல்லாமல் டெட் செல்களையும் அகற்ற உதவுகிறது.
Advertisment
Advertisements
அதன்படி, நம் முகத்திற்கு தேவையான அளவு அரிசி மாவு, சிறிதளவு தேன், கொஞ்சமாக தண்ணீர் மற்றும் ஒரு ஸ்பூன் தயிர் ஆகிய அனைத்தையும் சேர்த்து பசை பதத்திற்கு நன்றாக கலக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சிம்பிளான ஃபேஸ்பேக் தயாராகி விடும்.
இதனை முகத்தில் தடவி விட்டு சுமார் 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இப்படி செய்யும் போது உங்கள் முகம் பொலிவாக மாறி விடும். வெயில் காலத்திலும் முகம் பொலிவாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஃபேஸ்பேக்கை உபயோகிக்கலாம்.
நன்றி - KN SMILEY Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.