தக்காளி கூட தேன் சேர்த்தால் போதும்; முகத்தில் கருமையை நீக்க சூப்பரான ஃபேஸ்பேக் ரெடி!
தக்காளி மற்றும் தேன் சேர்த்து சிம்பிளான ஃபேஸ்பேக் எப்படி வீட்டிலேயே தயாரிப்பது என இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதனை பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் இருக்கும் கருமை நீங்கி பொலிவாக காட்சியளிக்கும்.
வெயில் காலத்தில் நம் சருமம் அடிக்கடி வறண்டு போகும். போதுமான நீர்ச்சத்து இல்லாததால் இவ்வாறு சருமம் வறட்சியாக காட்சியளிப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதேபோல், முகம் கருமையாக மாறி விடும். சிலருக்கு சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படவும் தொடங்கும்.
Advertisment
இது போன்ற பிரச்சனைகள் அனைத்தும் வெயில் காலத்தில் அதிகமாக இருக்கும். அதற்காக வெயில் நேரத்தில் வெளியே செல்லாமல் இருக்கவும் முடியாது. நம் அன்றாட பணிகளை செய்து முடிக்க வேண்டிய நிர்பந்தமும் இருக்கும்.
இந்த சூழலில் சருமத்தை சீராக பராமரிப்பதற்கு விலை உயர்ந்த ஃபேஸ் கிரீம், சீரம், டோனர் போன்ற பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று சிலர் கருதுவார்கள். இத்தகைய பொருட்களை வாங்கினாலும் அதில் சேர்க்கப்பட்டிருக்கும் இரசாயனங்கள் மூலமாக ஒவ்வாமை அல்லது பக்கவிளைவுகள் ஏற்படுமோ என்கிற தயக்கமும் சிலரிடம் இருக்கும்.
அந்த வகையில் வீட்டிலேயே எளிமையான ஏதேனும் ஒரு முறையை பின்பற்றி முகத்தில் இருக்கும் கருமையை போக்கி பொலிவாக மாற்ற முடியுமா என்று சிந்தித்து இருப்போம். அதன்படி, வீட்டில் இருக்கும் இரண்டு எளிமையான பொருட்களைக் கொண்டு நமக்கு தேவையான ஃபேஸ்பேக்கை தயார் செய்து கொள்ள முடியும்.
Advertisment
Advertisements
ஒரு தக்காளியை எடுத்து அதனை பாதியாக வெட்டி மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். பின்னர் இதனை வடிகட்டி தக்காளி சாறை மட்டும் தனியாக பிரிக்க வேண்டும். இந்த தக்காளி சாறுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நம் முகத்திற்கு தேவையான ஹோம்மேட் ஃபேஸ்பேக் ரெடியாகி விடும்.
இதனை முகத்தில் தடவி விட்டு சுமார் 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இப்படி செய்தால் முகம் பார்ப்பதற்கு பொலிவாக மாறிவிடும். இதில் இரசாயனங்கள் எதுவும் சேர்க்காததால் ஒவ்வாமை அல்லது பக்கவிளைவுகள் ஏற்படும் சாத்தியக் கூறுகளும் கிடையாது.
நன்றி - IBC Mangai Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.