பாசிப்பயறு மாவில் இந்த சாறு கொஞ்சம் சேர்த்து அப்ளை பண்ணுங்க… முகம் பொலிவாக மாறுவதை பாருங்க!
பாசிப்பயறு மாவை உங்கள் அழகுப் பராமரிப்பு வழக்கத்தில் சேர்த்துக்கொள்வதன் மூலம், இயற்கையான முறையில் அழகையும் ஆரோக்கியமான சருமத்தையும் பெறலாம். பல்வேறு சருமப் பிரச்னைகளுக்குத் தீர்வளிப்பதுடன், இயற்கையான பொலிவையும் வழங்குகிறது.
பாசிப்பயறு மாவை உங்கள் அழகுப் பராமரிப்பு வழக்கத்தில் சேர்த்துக்கொள்வதன் மூலம், இயற்கையான முறையில் அழகையும் ஆரோக்கியமான சருமத்தையும் பெறலாம். பல்வேறு சருமப் பிரச்னைகளுக்குத் தீர்வளிப்பதுடன், இயற்கையான பொலிவையும் வழங்குகிறது.
பாசிப்பயறு மாவில் இந்த சாறு கொஞ்சம் சேர்த்து அப்ளை பண்ணுங்க… முகம் பொலிவாக மாறுவதை பாருங்க!
அழகு சாதனப் பொருட்களுக்காக ஆயிரக்கணக்கில் செலவழிப்பதை தவிர்த்து, வீட்டிலேயே இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரிக்கலாம். பாசிப்பயறு மாவு உங்கள் சரும அழகை மேம்படுத்தும் அற்புதமான இயற்கை மூலப்பொருள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது பல்வேறு சருமப் பிரச்னைகளுக்குத் தீர்வளிப்பதுடன், இயற்கையான பொலிவையும் வழங்குகிறது.
Advertisment
மாசற்ற, பளபளப்பான சருமத்தைப் பெற, பாசிப்பயறு மாவுடன் கடலை மாவு மற்றும் முழு எலுமிச்சை சாற்றைச் சேர்த்து கலவையாகத் தயாரிக்கவும். இந்தக் கலவையை உங்கள் முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் மெதுவாகத் தேய்த்து மசாஜ் செய்யவும். பின்னர் 5 நிமிடங்கள் உலரவிட்டு, குளிர்ந்த நீரால் கழுவவும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி, பொலிவைத் தரும்.
முகப்பருவால் அவதிப்படுபவர்களுக்கு பாசிப்பயறு மாவு சிறந்த மருந்தாகும். பாசிப்பயறு மாவை தண்ணீருடன் கலந்து பசை போல செய்து, முகப்பருக்கள் உள்ள பகுதிகளில் நேரடியாகத் தடவவும். தொடர்ந்து செய்து வந்தால், பருக்கள் விரைவாக மறைந்து, சருமம் தெளிவாகும். பாசிப் பயறில் உள்ள ஆன்டிபாக்டீரியல் பண்புகள் முகப்பருவை ஏற்படுத்தும் கிருமிகளை அழித்து, சருமத்தை சுத்தப்படுத்தும்.
உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால், பாசிப்பயறு மாவுடன் பாலைக்கலந்து பசைபோல செய்து முகத்தில் தடவவும். சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரித்து, வறண்ட தன்மையைப் படிப்படியாகக் குறைக்கும். பால் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து, மென்மையாகவும் பட்டுப் போலவும் உணர வைக்கும்.
Advertisment
Advertisements
முழங்கைகள் மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஏற்படும் கருமை நிறம் பலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். இதைப் போக்க, பாசிப்பயறு மாவுடன் தயிர் கலந்து கலவையாகத் தயாரிக்கவும். இந்தக் கலவையை தினமும் முழங்கைகள், கழுத்துப் பகுதிகளில் தடவி 30 நிமிடங்கள் ஊறவிடவும். பின்னர், எள் எண்ணெயைக் கொண்டு அந்தப் பகுதிகளை மசாஜ் செய்யவும். இது கருமையான நிறத்தை விரைவாக நீக்கி, சருமத்திற்கு ஒரே நிறத்தைத் தரும். தயிர் இயற்கையான ப்ளீச்சிங் முகவராகச் செயல்பட்டு, நிறத்தை மேம்படுத்த உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.