/indian-express-tamil/media/media_files/kQ7afMqbiB4eySVPrSGX.jpg)
How to make ghee at home
ஓடியாடி விளையாடும் உங்கள் குட்டி தேவதைகளுக்கும், பருவம் எய்தும் உங்கள் பிள்ளைகளுக்கும் பால், வெண்ணெய், நெய் இந்த மூன்றும் கட்டாயம் கொடுக்க வேண்டிய உணவுப் பொருட்கள்! ஏன் தெரியுமா? வளரும் குழந்தைகளுக்கும், பதின் பருவத்தினருக்கும் அத்தியாவசியமான புரதச்சத்தும், கொழுப்பும் இந்த மூன்றிலும் நிறைந்துள்ளன.
புரதம் அவர்களின் தசை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்; கொழுப்போ, இரத்த நாளங்கள் போன்ற மிக நுண்ணிய உறுப்புகளின் சீரான வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.
அதுமட்டுமல்ல, நம் ஊரில் வெயில் காலம் தான் அதிகம். இந்த வெப்பத்தால் உங்கள் பிள்ளைகள் அவதிப்படலாம். சித்த மருத்துவத்தின்படி, வெண்ணெய் நம் உடலை குளிர்ச்சிப்படுத்தக்கூடியது.
கடைகளில் நெய் கிடைப்பது எளிதாக இருந்தாலும், வீட்டில் தயாரிக்கும் நெய்யின் சுவையும், மணமும் தனித்துவமானது. மேலும், அதன் தூய்மையையும் நாம் உறுதி செய்து கொள்ளலாம். வாருங்கள், வீட்டில் சுவையான மற்றும் சுத்தமான நெய் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.