Advertisment

2 கொய்யா இலை... நரை முடியை கருப்பாக்க 30 நிமிடத்தில் ஹோம் மேட் ஹேர் டை!

நரைமுடி கருப்பாக வேண்டுமா? கொய்யா இலை வைத்து வீட்டிலேயே ஹேர் டை செய்யலாம்; எளிமையான செய்முறை இங்கே

author-image
WebDesk
New Update
Hair mask

தலை முடி கருப்பாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். ஆனால் சிலருக்கு சீக்கிரமே நரைத்து விடும். இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. நரைமுடியை கருமையாக்க பெரும்பாலானோர் ஹேர் டைகளை பயன்படுத்துவர். ஆனால் இந்த ஹேர் டைகளில் உள்ள வேதிப் பொருட்கள் சிலருக்கு ஒத்துக் கொள்ளாது. மேலும் சில நாட்கள் மட்டுமே நீடிக்கும்.

Advertisment

ஆனால் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே நீங்களே ஹேர் டை தயாரித்துக் கொள்ளலாம். கொய்யா இலையை வைத்து, வீட்டிலேயே ஹேர் டை தயாரிப்பது என்பதை இப்போது பார்ப்போம். சிவா ஃபுட் பேக்டரி சேனலில் இந்த அருமையான ஹேர் டை செயல்முறை விளக்கப்பட்டுள்ளது. 

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் இரண்டு கொய்யா இலைகளை நறுக்கி போட வேண்டும். 2 நிமிடம் கொதித்த உடன் அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் ஒரு டீஸ்பூன் டீதூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். மேலும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

நன்றாக கொதித்த உடன் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைக்க வேண்டும். ஆறிய பின்னர் நன்றாக வடிகட்டி கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் காபித்தூள், ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 4 டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாகக் கலந்துக் கொள்ள வேண்டும். 

இதனுடன் 2 டீஸ்பூன் மருதாணி பவுடர் சேர்த்துக் கலக்க வேண்டும். பின்னர் இதனுடன் கொய்யா இலைச் சாறை சிறிது சிறிதாக சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும். 

இதனை அப்படியே சில மணி நேரங்களுக்கு வைத்து விட வேண்டும். 7-8 மணி நேரத்திற்கு பிறகு எடுத்துப் பார்த்தால் நன்றாக கருப்பாக இருக்கும். 

அவ்வளவு தான் சூப்பரான ஹோம்மேட் ஹேர் டை ரெடி. அப்படியே எடுத்து நரைமுடி மீது தடவிக்கொள்ளுங்கள். கருங்கூந்தலுடன் மிளிருங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle hair
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment