இந்த ஒரு ஹோம்மேட் ஹேர் ஜெல் போதும்; உங்க முடி உதிர்வு பிரச்சனைக்கு உடனடி தீர்வு
வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய ஹோம்மேட் ஹேர் ஜெல் எப்படி செய்வது என்பது குறித்து இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இவை முடி உதிர்வு பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு அளித்து, முடியை அடர்த்தியாக வளரச் செய்கிறது.
எத்தனையோ பிரச்சனைகளுக்கு சுலபமாக தீர்வு காண்பவர்களால் கூட, முடி உதிர்வு பிரச்சனையை சாதாரணமாக கடந்து விட முடியாது. தொடர்ச்சியாக மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை வழக்கத்தால் இன்றைய சூழலில் பெரும்பாலானவர்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை இருக்கிறது.
Advertisment
முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு அளிக்கக் கூடியதாக பல ஷாம்பூக்கள், ஹேர் ஆயில், ஹேர் சீரம் போன்றவற்றை விற்பனை செய்கின்றனர். இவற்றை எல்லோராலும் வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு, இவற்றின் விலை குறைவாக இருக்காது. மேலும், இந்த பொருட்களை பயன்படுத்தினாலும் சரியான தீர்வு கிடைப்பதில்லை என்றும் சிலர் கூறுகிறார்கள்.
இது போன்ற பொருட்களை பயன்படுத்தும் போது, அவற்றில் சேர்க்கப்பட்டிருக்கும் இரசாயனங்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. இது போன்ற சிக்கல்களை சுலபமாக தடுப்பதற்கு இயற்கையான பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே நம்மால் ஹேர் ஜெல்லை தயாரிக்க முடியும்,
அடுப்பில் ஒரு கப் தண்ணீர் வைத்து, அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு ஆளி விதைகளை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். இவை சுமார் 5 நிமிடங்கள் கொதித்ததும் வடிகட்டி, அதன் ஜெல்லை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளலாம். இதில், ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல், ஒரு கப் அளவிற்கு வேக வைத்த சாதத்தில் இருந்து வடித்த கஞ்சி ஆகிய அனைத்தையும் சேர்த்து கலக்க வேண்டும்.
Advertisment
Advertisements
இந்த ஹேர் ஜெல்லை தலையில் நன்றாக தேய்த்து விட்டு சுமார் 30 நிமிடங்களுக்கு பின்னர் குளித்து விடலாம். இந்த ஹேர் ஜெல்லை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்த வேண்டும். ஆளி விதைகளில் இருக்கும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ், நம் முடிக்கு தேவையான சத்துகளை வழங்கி அவற்றை உறுதியாக வளரச் செய்யும்.
நன்றி - SaKarasaathamum Vadakarium Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.