Advertisment

5 கிராம்புகள், கருஞ்சீரகம்... முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு தரும் ஹோம்மேட் ஹேர் ஆயில்!

கிராம்பு, கருஞ்சீரகம் ஆகிய பொருள்களைக் கொண்டு நம் வீட்டிலேயே ஹேர் ஆயில் செய்வது எப்படி என இப்பதிவில் பார்க்கலாம். இந்த ஹோம்மேட் ஹேர் ஆயில் முடி உதிர்வு பிரச்சனையை குறைக்க உதவுகிறது.

author-image
WebDesk
New Update
Hair oil

இன்றைய தலைமுறையின் பெரிய பிரச்சனை முடி உதிர்வாக இருக்குறது. இதற்கு சிலர் ஆயிரக்கணக்காக பணம் செலவளித்து ஹேர் ஆயில், ஷம்பூ உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றனர். இவற்றில் இரசாயனம் கலந்திருப்பதால் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய சாத்தியக் கூறுகளும் இருக்கிறது. 

Advertisment

இதற்காக ஹேர் ஆயில் ஒன்றை நம் வீட்டிலேயே தயார் செய்து கொள்ள முடியும். முதலில் 4 அல்லது 5 கிராம்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் ஒன்றரை ஸ்பூன் கருஞ்சீரகம், காய்ந்த செம்பருத்தி பூ, அரை ஸ்பூன் வெந்தயம் ஆகிய அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும்.

இந்த பொடியை ஒரு பாட்டிலில் போட்டு, அத்துடன் 50 மி.லீ தேங்காய் எண்ணெய் மற்றும் இரண்டு ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். இதை நன்றாக சேர்த்து கலந்து தலைக்கு தேய்க்கும் எண்ணெய்யாக பயன்படுத்தலாம். தலையில் தேய்ப்பதற்கு முன்பாக இதை வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம். 

இவ்வாறு ஹோம்மேட் ஹேர் ஆயில் பயன்படுத்துவதன் மூலம் பக்கவிளைவுகள் ஏற்படாது எனக் கூறப்படுகிறது.

Advertisment
Advertisement

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Essential hair oils for hair growth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment