இந்த ஒரு எண்ணெய் 45 நாட்களுக்கு போதும்; அடர்த்தியான முடிக்கு சூப்பர் ஹேர் ஆயில்
தலை முடியை அடர்த்தியாக வளரச் செய்வதற்கு தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் வேம்பாளம் பட்டையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
தலை முடியை அடர்த்தியாக வளரச் செய்வதற்கு தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் வேம்பாளம் பட்டையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
முடி உதிர்வு பிரச்சனை என்பது தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி இருக்கிறது. குறிப்பாக, இளைஞர்கள் பலரும் முடி உதிர்வால் பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்சனைக்காக மருத்துவர்களிடம் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Advertisment
முதலில் முடி உதிர்வதற்கான காரணத்தை கண்டறிந்து அதனை சரி செய்ய வேண்டியது அவசியம். அந்த வகையில், சில காரணங்களால் முடி உதிர்வு ஏற்படலாம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம், தூக்கமின்மை, பொடுகு தொல்லை போன்றவற்றால் முடி உதிர்வு ஏற்படக் கூடும்.
அதன்படி, இப்பிரச்சனைகளை சரி செய்வதன் மூலம் முடி உதிர்வை கட்டுப்படுத்தி அதனை அடர்த்தியாக வளரச் செய்ய முடியும். இது தவிர முடியை சரியாக பராமரித்தலும் அதன் வளர்ச்சியை அதிகரிக்கும். இதற்கு ஒரு ஹேர் ஆயிலை வீட்டிலேயே தயாரிக்கலாம்.
இதற்காக, வேம்பாளம் பட்டையை நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். இப்போது, ஒரு கண்ணாடி பாட்டிலில் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய்யை சமமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெய்யில் வேம்பாளம் பட்டையை கலந்து மூன்று நாட்களுக்கு வெயிலில் காய வைக்க வேண்டும்.
Advertisment
Advertisements
இதையடுத்து, இந்த எண்ணெய் சிவப்பு நிறத்திற்கு மாறி இருப்பதை பார்க்க முடியும். இந்த எண்ணெய்யை 45 நாட்களுக்கு தலை முடியில் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் பொடுகு தொல்லை, முடி உதிர்வு மற்றும் அடர்த்தியின்மை போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
இந்த எண்ணெய்யை தேய்த்த பின்னர் சீவக்காய் போட்டு குளிப்பது கூடுதல் பலன் அளிக்கும். எனவே, முடி உதிர்வு பிரச்சனைக்கு இயற்கையான முறையில் தீர்வு காண நினைப்பவர்கள் இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம்.
நன்றி - 7 Days Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.