முடியை அடர்த்தியாக்க இந்த ஹேர் ஆயில் வீட்டிலேயே தயாரிக்கலாம்; நடிகை மீரா கிருஷ்ணா டிப்ஸ்
தலை முடியை அடர்த்தியாக்குவதற்கு வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தக் கூடிய ஹேர் ஆயில் குறித்து சீரியல் நடிகை மீரா கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இதில் இரசாயனங்கள் எதுவும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
தலை முடியை அடர்த்தியாக்குவதற்கு வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தக் கூடிய ஹேர் ஆயில் குறித்து சீரியல் நடிகை மீரா கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இதில் இரசாயனங்கள் எதுவும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
தலை முடியை எவ்வாறு அடர்த்தியாக்குவது என்ற இன்றைய சூழலில் பலரும் இணையத்தில் தேடுகின்றனர். அந்த அளவிற்கு முடி தொடர்பான பிரச்சனைகள் இன்று இளம் தலைமுறையினரிடம் அதிகமாக காணப்படுகிறது. முடி உதிர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
Advertisment
குறிப்பாக, வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம், தூக்கமின்மை, பொடுகு தொல்லை என்று முடி உதிர்வுக்கு பல காரணங்கள் இருக்கிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் எந்த காரணத்தினால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது என்பதை அறிந்து அதனை சரி செய்யலாம்.
இது தவிர முடியை சரியாக பராமரிக்காமல் இருந்தாலும் அதன் அடர்த்தி குறைந்து காணப்படும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது ஹேர்பேக் பயன்படுத்தி குளிப்பது, தரமான ஹேர் ஆயில் உபயோகிப்பது என்று சில வழிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும். அப்போது தான் தலை முடி ஆரோக்கியமாக வளரும்.
அந்த வகையில் வீட்டிலேயே நாம் தயாரித்து பயன்படுத்துவதற்கு ஏற்ற ஹேர் ஆயில் ஒன்றை சீரியல் நடிகை மீரா கிருஷ்ணா குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் தன்னுடை முடி அடர்த்தியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கான செய்முறையை தற்போது காணலாம்.
Advertisment
Advertisements
அதன்படி ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்யில் சிறிதளவு துளசி, வெந்தயம், நெல்லிக்காய், கற்றாழை மற்றும் கறிவேப்பிலை ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக காய்க்க வேண்டும். குறிப்பாக, ஒரு லிட்டர் எண்ணெய் சுமார் முக்கால் லிட்டர் வரும் வரை இதனை காய்க்க வேண்டும். இத்துடன் கொஞ்சமாக விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம் என்று மீரா கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
இதனை தலையில் தேய்ப்பதற்கு முன்பாக சற்று சூடுபடுத்தி அதன் பின்னர் தேய்த்து மசாஜ் செய்யலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார். இவ்வாறு நாம் வீட்டில் தயாரிக்கும் எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தும் போது அவை நல்ல பலன் அளிக்கும் என்றும் மீரா கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
நன்றி - Tharaa Speakz Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.