நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பொருட்களை கொண்டு ஹோம்மேட் ஹேர் ஆயில் ஈசியாக செய்யலாம். ஒரு சிறிய பாத்திரத்தில் செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய்யை 50 மில்லி லிட்டர் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதை தனியாக வைத்து விட்டு, ஒரு டீஸ்பூன் அளவு வெந்தயம், ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகம், ஒரு கைப்பிடி மருதாணி இலைகள் ஆகிய அனைத்தை மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். இந்த பொடியை அடுப்பில் ஒரு பாத்திரத்தில் வைத்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளலாம்.
வறுத்து எடுத்த பொடியை, தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இவற்றை கலந்த பின்னர், சுமார் 50 கிராம் வேம்பாளம் பட்டையை இந்த எண்ணெய்யுடன் சேர்க்க வேண்டும். இந்த வேம்பாளம் பட்டை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
இப்போது, டபுள் பாயில் முறைப்படி இந்த எண்ணெய்யை கொதிக்க வைக்க வேண்டும். அதாவது, அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின்னர், இந்த கொதிக்கும் தண்ணீரில் எண்ணெய் இருக்கும் பாத்திரத்தை வைத்து சுமார் 3 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
இறுதியாக இந்த எண்ணெய்யை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி விட்டு, ஒரு வாரத்திற்கு பின்னர் இதை வடிகட்டி பயன்படுத்தலாம். மேலும், இதே பொருட்களுடன் மீண்டும் அதே அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து அதனையும் வடிகட்டி பயன்படுத்தலாம். அவ்வாறு 3 மாதங்கள் வரை இந்த பொருட்களை பயன்படுத்த முடியும்.
இந்த எண்ணெய்யை வாரத்திற்கு இரண்டு முறையாவது தலைக்கு தேய்த்து மசாஜ் செய்தால், தலை முடி கருமையாக வளரும். ஏற்கனவே இருக்கும் நரை முடிகள் மறையத் தொடங்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.