இந்த பொருட்கள் ஒரு கைப்பிடி அளவு போதும்... உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சனையே இருக்காது!
முடி உதிர்வு பிரச்சனையை போக்குவதற்கு வீட்டிலேயே சிம்பிளான ஹேர்பேக் தயாரிக்கும் முறை குறித்து இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இந்த பொருட்களும் எளிதாக கிடைத்து விடுவதால் இதனை சுலபமாக செய்து விடலாம்.
முடி உதிர்வு பிரச்சனையை போக்குவதற்கு வீட்டிலேயே சிம்பிளான ஹேர்பேக் தயாரிக்கும் முறை குறித்து இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இந்த பொருட்களும் எளிதாக கிடைத்து விடுவதால் இதனை சுலபமாக செய்து விடலாம்.
இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் பிரதானமாக முடி உதிர்வு இருக்கிறது. வயது வித்தியாசமின்றி, பாலின பேதமின்றி ஏராளமானோர் இந்த பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.
Advertisment
முடி உதிர்வு ஏற்படுவதற்கு எத்தனையோ காரணங்கள் கூறப்படுகின்றன. உதாரணத்திற்கு, வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம், தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் சத்துக் குறைபாடு போன்ற காரணங்களால் தலை முடி உதிர்வதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
எனினும், தலை முடிக்கு வாரம் ஒரு முறை ஹேர்பேக் போட்டு சீராக பராமரித்தால், இந்தப் பிரச்சனையை கட்டுப்படுத்தி விடலாம் என்று அழகுக் கலை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும், இரசாயனங்கள் கலந்த ஹேர்பேக் பயன்படுத்துவதை விட இயற்கையான பொருட்களை பயன்படுத்துவது ஒவ்வாமை போன்ற பக்க விளைவுகள் ஏற்படாமல் தடுக்கும்.
இதற்காக வீட்டிலேயே ஹேர்பேக் தயாரித்து எடுத்துக் கொள்ளலாம். அதன்படி, ஒரு கைப்பிடி அளவிற்கு துளசி, வேப்பிலை, மருதாணி, பெரிய நெல்லிக்காய், செம்பருத்திப் பூ, செம்பருத்தி இலைகள் மற்றும் கருப்பு உளுந்து ஆகிய அனைத்தையும் காய வைத்து, அரைத்து பொடியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
Advertisment
Advertisements
இவ்வாறு செய்தால் இயற்கையான ஹேர்பேக் ரெடியாகி விடும். இதனை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்த வேண்டும். அந்த வகையில், இந்தப் பொடியை தலைக்கு தேவையான அளவு எடுத்து, அத்துடன் சிறிது தயிர் கலந்து தேய்க்க வேண்டும். அதன் பின்னர், சுமார் 20 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். இப்படி தொடர்ச்சியாக செய்யும் போது முடி உதிர்வு பிரச்சனை குறையத் தொடங்கும்.
இப்படி வீட்டில் தயாரிக்கும் ஹேர்பேக்கில் இரசாயனங்கள் சேர்க்காததால் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு கிடையாது.
நன்றி - Lavanya Selvakumar Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.