தலை முடி உதிர்வை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இவை நம் உடலில் ஏற்படக் கூடிய ஆரோக்கிய குறைபாடு குறித்து உணர்த்துவதற்கு எச்சரிக்கையாக இருக்கும். போதிய ஊட்டச்சத்து இல்லாமல் இருந்தால் தலை முடி உதிர்வு அதிகமாக ஏற்படும். உதாரணத்திற்கு, புரதச் சத்து, பையோடின் போன்றவை சரியான அளவு உடலில் இல்லை என்றால் முடி உதிர்வு இருக்கும்.
அந்த வகையில், முடி உதிர்வை கட்டுப்படுத்தி இயற்கையான முறையில் அடர்த்தியாக வளரச் செய்வதற்கான ஹோம்மேட் ஹேர்பேக் எப்படி செய்வது என தற்போது பார்க்கலாம். நம் தலை முடிக்கு தேவையான அளவு கற்றாழை ஜெல்லை தனியாக பிரித்து எடுத்து அதனை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும்.
இத்துடன் இரண்டு முட்டை மற்றும் ஒரு ஸ்பூன் கேஸ்டர் ஆயில் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். இந்த ஹேர்மாஸ்கை முடியின் வேர்ப்பகுதியில் இருந்து நுனிப்பகுதி வரை முழுமையாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.
இறுதியாக சுமார் 20 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். வாரத்திற்கு இவ்வாறு இரண்டு முறை செய்து வந்தால், முடி உதிர்வு குறைந்து அடர்த்தியாக வளரும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.