தேங்காய் எண்ணெய் கூட ஒரு பொருள் போதும்; முடி பராமரிப்பில் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
தலை முடி பராமரிப்பில் இந்த 2 ஸ்டெப்ஸை வாரத்திற்கு ஒரு முறை பின்பற்றினால் போதும். உங்கள் தலை முடி அடர்த்தியாக வளரும். இதற்காக இரசாயனங்கள் எதுவும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
தலை முடி மற்றும் சருமம் போன்றவற்றை ஆரோக்கியமாக பராமரிக்க சில வழிமுறைகளை நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டி இருக்கும். மருத்துவர்கள் தொடங்கி அழகியல் வல்லுநர்கள் வரை இதனை தான் தொடர்ச்சியாக அறிவுறுத்துகின்றனர்.
Advertisment
ஆனால், எந்த மாதிரியான பராமரிப்பு வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்ற குழப்பம் பலருக்கு இருக்கும். ஒவ்வொருவரது தலைமுடியும் வெவ்வேறு தன்மை கொண்டதாக இருக்கும். அந்த வகையில், முடி வளர்ச்சியை அடர்த்தியாக்குவதற்கு இந்த வழிமுறையை வாரத்திற்கு ஒரு முறை பின்பற்றலாம்.
அதன்படி, நம் தலைக்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெய் மற்றும் வேம்பாலப்பட்டை ஆகிய இரண்டையும் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இப்படி செய்தால் தேங்காய் எண்ணெய் சிவப்பு நிறத்திற்கு மாறி இருக்கும். இதன் பின்னர் எண்ணெய்யை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம்.
இப்போது தலையில் எண்ணெய் தேய்ப்பதற்கு முன்பாக, முடியை நன்றாக சீவி விட வேண்டும். அதன் பின்னர், வடிகட்டிய எண்ணெய்யை சிறிது சிறிதாக எடுத்து முடியின் வேர்ப்பகுதியில் இருந்து நுனிப்பகுதி வரை தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்ததும் சுமார் 2 மணி நேரத்திற்கு முடியை அப்படியே விட வேண்டும்.
Advertisment
Advertisements
இதையடுத்து, தலை முடிக்கு தேவையான அளவிற்கு கற்றாழை ஜெல்லை மிக்ஸியில் அரைத்து, அதனை முடியில் தேய்க்க வேண்டும். இதன் பின்னர், சுமார் 20 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்தால் முடியின் வளர்ச்சி அடர்த்தியாக இருக்கும்.
நன்றி - AррIе Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.