வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றத்தால் இன்றைய தலைமுறையினரின் உடல்நிலையில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உடல்நல பாதிப்பை உணர்த்தும் விதமாக பலருக்கு முடி உதிர்வு பிரச்சனைகள் தான் முதலில் தோன்றும். ஆனால், முடி உதிர்வை வெறும் அழகியல் சார்ந்த பிரச்சனையாக மட்டுமே பலர் கருதுகிறார்கள்.
போதுமான அளவு புரதம் மற்றும் பையோட்டின் சத்துகள் இல்லாதது தான் முடி உதிர்வின் பிரச்சனையாக இருக்கும். மேலும், மன அழுத்தம் மற்றும் அதிகப்படியான வேலை நேரம் போன்ற பிரச்சனைகளும் இதற்கு காரணியாக இருக்கும். எனவே, முடி உதிர்வை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும்.
இதற்காக ஏராளமாக பணம் செலவு செய்து ஹேர் ஆயில், ஷாம்புக்கள் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் இருக்கும் இரண்டு பொருட்களை கொண்டு சிம்பிளான ஹேர்பேக் தயாரிக்கலாம்.
அதன்படி, முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் ஒரு ஸ்பூன் தயிர் ஆகிய இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனை குளிப்பதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின்னர், சீவக்காய் போட்டு குளித்து விடலாம். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் முடி உதிர்வு பிரச்சனை குறைந்து வளர்ச்சி அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.