கிச்சனில் இருக்கும் இந்த 3 பொருட்கள் போதும்; முடியை அடர்த்தியாக மாற்ற ஈஸியா ஹேர்பேக் பண்ணலாம்
நம் வீட்டு கிச்சனில் இருக்கும் சிம்பிளான மூன்று பொருட்கள் கொண்டு எவ்வாறு ஈஸியாக ஹேர்பேக் தயாரிக்கலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இது நம் முடியை அடர்த்தியாக மாற்றும்.
நம் வீட்டு கிச்சனில் இருக்கும் சிம்பிளான மூன்று பொருட்கள் கொண்டு எவ்வாறு ஈஸியாக ஹேர்பேக் தயாரிக்கலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இது நம் முடியை அடர்த்தியாக மாற்றும்.
முடி உதிர்வு பிரச்சனை என்பது மிகவும் பொதுவான ஒன்றாக மாறி இருக்கிறது. காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகளுக்காக மருத்துவர்களிடம் செல்பவர்களின் எண்ணிக்கையை விட தற்போது முடி உதிர்வை சரி செய்ய வேண்டும் என்று மருத்துவர்களிடம் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது.
Advertisment
குறிப்பாக, முடி உதிர்வு பிரச்சனைக்கு ஏராளமான காரணங்கள் கூறப்படுகின்றன. சத்துக் குறைபாடு, உணவு முறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம், பொடுகு தொல்லை மற்றும் மன அழுத்தம் என்று நிறைய காரணங்களால் முடி உதிர்வு ஏற்படும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
எனினும், தலை முடிக்கு வாரம் ஒரு முறை ஹேர்பேக் பயன்படுத்தி பராமரிக்கவில்லை என்றால், முடியில் அடர்த்தி குறைந்து விடும். இதற்காக விலை உயர்ந்த ஷாம்பூ, ஆயில் அல்லது சீரம் போன்றவை வாங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நம் வீட்டு கிச்சனில் இருக்கும் சிம்பிளான பொருட்கள் பயன்படுத்தியே ஹோம்மேட் ஹேர்பேக் தயாரித்துக் கொள்ளலாம்.
அதன்படி, ஒரு கப் பச்சை பயிறு, அரை கப் வெந்தயம் மற்றும் கொள்ளு ஆகியவற்றை நன்றாக கழுவிய பின்னர் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர், இவற்றை மிக்ஸியில் அரைத்தால் நம் தலை முடிக்கு தேவையான ஹேர்பேக் தயாராகி விடும்.
Advertisment
Advertisements
இதனை தலை முடியில் தேய்த்து விட்டு சுமார் 20 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். இப்படி வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக செய்து வந்தால், நம்முடைய முடி அடர்த்தியாக இருக்கும். மேலும், முடி உதிர்வு பிரச்சனையும் குறையத் தொடங்கும். இதில் இரசாயனங்கள் சேர்க்காததால் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பும் கிடையாது.
நன்றி - Vani's Kitchen Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.