இன்றைய சூழலில் உணவு முறை மாற்றும், வாழ்க்கை முறை மாற்றம், மன அழுத்தம், மாசுபாடு போன்ற பல பிரச்சனைகளால் ஆண், பெண் என அனைத்து பாலினத்தவருக்கும் முடி உதிர்வு தொல்லை இருக்கிறது. இவற்றை தடுப்பதற்கு எளிமையான ஹோம்மேட் ஹேர்பேக்கை நாம் பயன்படுத்தலாம்.
இதற்காக பாசிப்பருப்பு, முட்டை, தயிர் ஆகியவை நம் வீட்டில் இருந்தாலே போதும். நம் தலைமுடிக்கு தேவையான அளவு பாசிப்பருப்பை எடுத்து ஒரு ஈரத்துணியில் இரவு நேரத்தில் கட்டி வைக்க வேண்டும். காலை எழுத்து பார்த்தால் இதில் முளைகட்டி இருக்கும். பின்னர், முளைகட்டிய பருப்புடன், தயிர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும்.
இவ்வாறு அரைத்து எடுத்ததும், அத்துடன் ஒரு முட்டையை சேர்த்து கலக்க வேண்டும். இப்படி செய்தால் இரசாயனங்கள் இல்லாத ஹோம்மேட் ஹேர்பேக் தயாராகி விடும். இந்த ஹேர்பேக்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி தலைக்கு குளிக்கலாம்.
இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வந்தால் முடி உதிர்வு, பொடுகு போன்ற பிரச்சனைகள் நீங்கி, முடியின் வளர்ச்சி அடர்த்தியாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.