இளம் வயதிலேயே நரைமுடி: மீண்டும் கருப்பாக வீட்டிலேயே நேச்சுரல் ஹேர் டை இப்படி ரெடி பண்ணுங்க- டாக்டர் நித்யா
பக்க விளைவுகள் இல்லாமல், இயற்கையாகவே தலைமுடியை கருமையாக்கும் வழிமுறைகளையும், நரைமுடி வராமல் தடுப்பதற்கான உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களையும் பற்றி இந்த வீடியோவில் விரிவாகப் பேசுகிறார் சித்த மருத்துவர் நித்யா.

இளம் வயதிலேயே நரைமுடி ஏற்படுவது இன்றைய காலகட்டத்தில் சாதாரணமாகிவிட்டது. நரைமுடியை மீண்டும் கருமையாக்க முடியுமா, பக்க விளைவுகள் இல்லாத ஹேர் டை உண்டா போன்ற கேள்விகள் பலருக்கும் இருக்கும். கடைகளில் கிடைக்கும் ரசாயன ஹேர் டைகள் சிலருக்கு அலர்ஜி ஏற்படுத்தி, சரும அரிப்பு, கண் இமைகளில் வீக்கம், முகம் உரிதல், சொரியாசிஸ் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
Advertisment
பக்க விளைவுகள் இல்லாமல், இயற்கையாகவே தலைமுடியை கருமையாக்கும் வழிமுறைகளையும், நரைமுடி வராமல் தடுப்பதற்கான உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களையும் பற்றி இந்த வீடியோவில் விரிவாகப் பேசுகிறார் சித்த மருத்துவர் நித்யா.
இயற்கையான ஹேர் டை தயாரிப்பது எப்படி?
Advertisment
Advertisements
வீட்டிலேயே இயற்கை ஹேர் டை தயாரிக்க சில மூலிகைகள் தேவை:
மருதாணி பொடி: இது தலைமுடிக்கு இயற்கையான செந்நிறத்தை கொடுக்கும்.
அவுரி இலை பொடி: கூந்தல் தைலங்களில் முக்கிய மூலிகையாகப் பயன்படுத்தப்படும் இது, தலைமுடிக்கு இயற்கையான கருமை நிறத்தை அளிக்கும்.
திரிபலா சூரணம்: கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவை இது.
தயாரிக்கும் முறை:
மருதாணி பொடி, அவுரி பொடி, திரிபலா சூரணம் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொள்ளவும். இரவில், இக்கலவையை டீ டிகாஷனுடன் (கெட்டியாக கொதிக்க வைத்தது) கலந்து, இரவு முழுவதும் ஊறவிடவும்.
காலையில், இந்தக் கலவையுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் அரை ஸ்பூன் கிராம்பு பொடி சேர்த்து நன்கு கலக்கவும். தலைமுடியை சுத்தமாக அலசிய பிறகு, இந்தக் கலவையை தலைமுடியில் தடவி 2-3 மணி நேரம் ஊறவிடவும்.
பிறகு, தலைமுடியை நன்கு அலசவும். முதல் முறை பயன்படுத்தியதும் 50-60% நரைமுடி மறைந்திருப்பதை காணலாம். அடுத்த நாளும் இதே முறையைப் பின்பற்றவும். தொடர்ந்து இவ்வாறு செய்து வருவதன் மூலம் நரைமுடி படிப்படியாகக் குணமாகும்.