வெந்தயம், கிராம்புடன் இதை சேர்த்து எண்ணெய் ரெடி பண்ணுங்க; முடி அடர்த்தியா வளரும்; டாக்டர் ராஜலட்சுமி
தலை முடியின் வேர்களை வலுப்படுத்தி, அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு உதவும் சக்திவாய்ந்த ஹேர் ஆயில் தயாரிக்கும் ரகசியத்தை டாக்டர் ராஜலட்சுமி தனது யூடியூப் வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
தலை முடியின் வேர்களை வலுப்படுத்தி, அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு உதவும் சக்திவாய்ந்த ஹேர் ஆயில் தயாரிக்கும் ரகசியத்தை டாக்டர் ராஜலட்சுமி தனது யூடியூப் வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
வெந்தயம், கிராம்புடன் இதை சேர்த்து எண்ணெய் ரெடி பண்ணுங்க; முடி அடர்த்தியா வளரும்; டாக்டர் ராஜலட்சுமி
முடி உதிர்வு, பொடுகு, மற்றும் முடி வளர்ச்சி இல்லாமை போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்களுக்கு முடி வேர்களை வலுப்படுத்தி, அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு உதவும் சக்திவாய்ந்த ஹேர் ஆயில் தயாரிக்கும் ரகசியத்தை டாக்டர் ராஜலட்சுமி தனது யூடியூப் வீடியோவில் பகிர்ந்துள்ளார். வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கக்கூடிய இந்த எண்ணெய், ஆரோக்கியமான கூந்தலுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
தேவையான பொருட்கள்:
ரோஸ்மேரி (காய்ந்தது)
கிராம்பு
Advertisment
Advertisements
வெந்தயம்
வேம்பாட பட்டை
கருஞ்சீரக தைலம்
பூசணி தைலம்
தேங்காய் எண்ணெய்
பாதாம் எண்ணெய்
தயாரிக்கும் முறை: முதலில், கண்ணாடி பாட்டிலைத் தேர்ந்தெடுக்கவும். 200 மில்லி எண்ணெய் தயாரிக்க, 4 ஸ்பூன் காய்ந்த ரோஸ்மேரியைச் சேர்க்கவும். அடுத்து, 15 லவங்கத்தை சேர்க்கவும். முடி வேர்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். 2 ஸ்பூன் வறுக்காத வெந்தயத்தை சேர்க்கவும். வெந்தயம் முடி உதிர்வதைக் குறைக்கும். ஒரு ஸ்பூன் நொறுக்கிய வேம்பாட பட்டையைச் சேர்க்கவும். இது முடி வளர்ச்சிக்கு உதவும். இப்போது, 50 மில்லி கருஞ்சீரக தைலம், 50 மில்லி பூசணி தைலம், 50 மில்லி தேங்காய் எண்ணெய், மற்றும் 50 மில்லி பாதாம் எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த பாட்டிலை தினமும் வெயிலில் வைத்து எடுக்க வேண்டும். 7 நாட்களுக்குத் தொடர்ந்து செய்யவேண்டும்.
இரவு நேரங்களில், பாட்டிலை வீட்டிற்குள் எடுத்து வைத்து, மூடியை லேசாகத் திறந்து ஒரு துணியால் மூடி வைக்கவும். 7 நாட்களுக்குப் பிறகு, எண்ணெய் சிவப்பு நிறத்தில் மாறி, புதினா போன்ற நறுமணம் வரும். எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் மெல்லியதாக இருக்க வேண்டும். இல்லையெனில், இன்னும் சில நாட்கள் வெயிலில் வைக்கலாம். எண்ணெய் சரியான பக்குவத்திற்கு வந்தவுடன், அதை வடிகட்டி சுத்தமான கண்ணாடி பாட்டிலில் சேமித்துக் கொள்ளலாம்.
பயன்படுத்தும் முறை: இந்த எண்ணெயைத் தினமும் பயன்படுத்தலாம். ஆனால், தினமும் குளிப்பவர்கள் எண்ணெயைப் பயன்படுத்திய மறுநாள் தலைக்கு குளிப்பதை உறுதி செய்ய வேண்டும். தினமும் குளிக்க முடியாதவர்கள், வாரத்திற்கு இரண்டு முறை இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம். பெண்கள் தங்கள் வகிடு எடுத்து, வாரத்திற்கு ஒரு முறை புகைப்படம் எடுத்து, நான்கு மாதங்களில் முடி வளர்ச்சியில் ஏற்படும் மாற்றத்தை தெளிவாகக் கவனிக்கலாம்.
ஆண்கள் தங்கள் பக்கவாட்டில் எண்ணெயைப் பூசி, மாற்றத்தைக் கண்காணிக்கலாம். இந்த எண்ணெய் முடி வளர்ச்சியைத் தூண்டி, முடி உதிர்வதைக் குறைக்கிறது. மேலும், இது பொடுகுத் தொல்லையை நீக்கி, முடி வேர்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, நுண்ணறைகளைத் தூண்டுவதன் மூலம் ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான கூந்தலைப் பெற உதவுகிறது.
வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கக்கூடிய இந்த எண்ணெய், ரசாயனங்கள் இல்லாத, பக்கவிளைவுகளற்ற தீர்வாக முடிப் பிரச்னைகளுக்கு உதவும் என்று நம்பப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.