அதிக இரசாயனம் பயன்படுத்துவதால் கைகளில் உள்ள சருமம் அடிக்கடி வறண்டு போகும். சருமத்தில் இயற்கையாக இருக்கும் நுண்ணுயிர்கள் அழிந்து போவதால் வறட்சி ஏற்படும்.
மேலும், செயற்கையாக பயன்படுத்தும் க்ரீம்களாலும் சருமம் வறட்சி அடையும். இவற்றின் மூலப் பொருள் பெட்ரோலியம் ஆக இருக்கும். இவற்றை பயன்படுத்தும் போது சருமத்தில் உள்ள இயற்கையான வைட்டமின்கள், மினரல் சத்துகள் அழிந்து விடுகின்றன.
இவற்றை தடுக்க இயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட ஆயின்மென்டை பயன்படுத்தலாம். அவற்றில் வைட்டமின்கள் ஏ, இ, டி, கே, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ், லெசிதின் போன்றவை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதற்காக ஒரு முட்டையின் மஞ்சள் கரு, 13 கிராம் தேன், 26 கிராம் ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை மூன்றையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இப்படி இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட ஆயின்மென்டை நம் கைகளில் தடவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இதை பயன்படுத்தலாம்.
முகத்திற்கு தேவையான இயற்கையான ஆயின்மென்டையும் இதே மூல பொருள்கள் கொண்டு தயாரிக்கலாம். ஆனால், அவற்றில் கூடுதலாக முட்டையின் வெள்ளைக் கரு, எலுமிச்சை சாறு 3 துளிகள் சேர்க்க வேண்டும். இதனை நம் முகத்தில் வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.
இப்படி செய்வதால் சருமத்தில் உள்ள வறட்சி தன்மை நீங்கி பொலிவாக மாறும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“