வெங்காயத்தால் தயாரிக்கப்பட்ட எண்ணெய்யை பயன்படுத்தும் போது முடி வளர்ச்சி அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இவை, இளநரையை தடுத்து, முடிக்கு தேவையான சத்துகளை கொடுப்பதுடன், முடி உதிர்வை கட்டுப்படுத்துவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். அதன்படி, வெங்காயம் கொண்டு எண்ணெய் எப்படி செய்வது என பார்க்கலாம்.
இரண்டு வெங்காயங்களை சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு, அத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து அரைக்க வேண்டும். அரைத்து எடுத்த வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் கூடுதலாக அரை கப் தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும். இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெங்காயம் நிறம் மாறும் வரை குறைவான அளவு நெருப்பில் சூடுபடுத்த வேண்டும்.
அதன் பின்னர், வெங்காயம் ஆறியதும் அதனை ஒரு வெள்ளைத் துணியில் வடிகட்டி எண்ணெய்யை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளலாம். வெங்காயத்தின் மனம் மாறுவதற்கு சில துளிகள் நறுமணம் நிறைந்த எண்ணெய்யை சேர்க்கலாம். இந்த எண்ணெய்யை வாரத்திற்கு இரண்டு முறை தலையில் தேய்த்து மசாஜ் செய்தால் முடி உதிர்வு பிரச்சனை குறையத் தொடங்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.